உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“அறம்நனி சிறக்க அல்லது கெடுக”

66

'அரசு முறைசெய்க களவில் லாகுக்

“நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக்” “மாரி வாய்க்க வளநனி சிறக்க”

99

என ஐங்குறு நூற்று வேட்கைப் பத்து விளக்கும்.

யாப்பமைதி:

85

(7)

(8)

(9)

(10)

இப்பாடலின் அடிபலவும் அந்தாதியாகி அழகுபெற

நின்றன. இதனைச் செந்நடைச் சீரந்தாதி என்பார் யாப்பருங்கல விருத்தியுடையார். அவர் தரும் பாட்டு வருமாறு:

66

"முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி;

இப்பி ஈன்ற இயங்குகதிர் நித்திலம்; நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்; எக்கர் இட்ட எறிமீன் உணங்கல்; உணங்கல் கவரும் ஒய்தாள் அன்னம்; அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர்; மகளிர் கொய்த மயங்குகொடி அடம்பி அடம்பி அயலது நெடும்பூந் தாழை; தாழை அயலது வீழ்குலைக் கண்டல்; கண்டல் அயலது முண்டகக் கானல்; கானல் அயலது காமரு நெடுங்கழி; நெடுங்கழி அயலது நெருங்குகுடிப் பாக்கம்; பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி; பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின் இடவ குடவ தடவ ஞாழலும்

இணர துணர்புணர் புன்னையும் கண்டலும்

கெழீஇய கானலஞ் சேர்ப்பனை இன்றித் தீரா நோயினள் நடுங்கி

வாராள் அம்ம வருந்துயர் பெரிதே

- யா. வி. 52 மேற்.