உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் 12

(9)

7. புல்லறிவாண்மை

தான் சிற்றறிவினனாக இருந்து கொண்டு தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் உரையை உளங்

கொளாமை புல்லறி வாண்மையாகும். புல்லிய அறிவை ஆளும் தன்மை புல்லறி வாண்மை என்க.

10.

“வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு

“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்"

நேரிசை வெண்பா

அரும்பொன்அன் னார்கோட்டி ஆர்வுற்றக் கண்ணும் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிய ஒன்றோ துயில்மடிப அல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா இருந்து.

- திருக். 844

- திருக். 848.

இ- ள்) தங்கமே அனையவர் கூடிய அவையில் கூடி இருக்கும் வாய்ப்புப் பெறினும் கூர்த்த அறிவில்லாதவர் கரும்பு தின்பவர்முன் நாய்போல் வாளா இருப்பர்; அம்மட்டோ? உறங்கியும் கிடப்பர் ; அன்றேல் தாம் கேட்டவற்றை வேறிடத் திருந்து மறுதலைப்படக் கூறி மகழ்வர் என்றவாறு.

இ - து:- “கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன், சொல்லா திருக்கப் பெறின்” என்பதாம். திருக். 403.

-

(வி -ரை) கல்வி கருந்தனம் எனப்படும் ஆகலின் அக் கல்வியில் தேர்ந்தவர் அரும்பொன் அன்னார் எனப்பெற்றனர். அத்தகையவர் கூடிய சங்கத்தை,

66

‘தங்கமே அனையார் கூடிய ஞான

சமரச சுத்தசன் மார்க்கச்

சங்கமே கண்டு களிக்கவும்

பிள்ளைச்சிறு. 21.

என்பார் வள்ளலார். “சங்கம் செய்வதைத் தங்கம் செய்யாது” என்னும் பழமொழியும் சங்கத்தின் மாண்பைச் சாற்றும்.

கோட்டி - கூட்டம், கோட்டம் - வளைவு; வளைந்திருத்தல். சுற்றுமதில் கோட்டை எனப் பெறுவதும், கோட்டையுள்