உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

87

அமைந்த கோயில் கோட்டம் எனப்பெறுவதும், கூட்டம் சேர்த்துவரவும், அறிவுத் திரிவு அமையவும் ஆகியவன் கோட்டி எனப்பெறுவதும் கருதுக.

66

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்’’

(401)

என்பது திருக்குறள்.

ஆர்வுறுதல் - அமைந்திருத்தல். கரும்புலவர் - கல்லாதவர். அவரைப் புலவர் என்றது அங்கதம் ; வஞ்சப் புகழ்ச்சி என்பதும் அது.

நல்லறிவாளர் கரும்பு தின்பார்க்கும், புல்லறிவாளர் நாய்க்கும் உவமை ஆயினர். கரும்பினைக் கடித்து மென்று சுவைத்துச் சாற்றைக் குடித்துச் சக்கையைத் துப்புவர். சாறு, கரும்பைத் தின்பார் உடற்குள், சேர, சக்கை வெளியே துப்பப் பெறும். அதனை நாய் தின்னல் இல்லை; ஆயினும் தின்பாரை நோக்கி ஏதேனும் கிட்டும் என வாளா இருந்து, துப்பியதைப் பயன்படுத்தவும் மாட்டாமல் ஒழியும். அதுபோல் புல்லறி வாளரும் கற்றார் உரையில் பயன் கொள்ளார் என உவமையை விரித்துக் கொள்க.

துயில் - உறக்கம்; மடி உறக்கம்; மடி - சோம்பர். துயில்மடிதல் - உறங்கிச் சோம்பிக் கிடத்தல். விண்டு உரைத்தல் - மறுதலைப் படப் பிளந்துரைத்தல். 'மடி, துயில், பிணக்கு' முதலியவை கற்கத் தகாதவர் தன்மை என்ப. (நன். 39.)

இத் தகடூர் யாத்திரைப் பாட்டுடன் கீழ்வருவனவற்றை ஒப்பிட்டுக் காண்க:

66

'கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று

“பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு

99

“பொழுந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் - இழிந்தவை