உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அடை

இளங்குமரனார் தமிழ்வளம்

12

தாம்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல்தேர்வு”

“கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்நெஞ்சு உதைத்தலால் - மற்றுமோர் தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.”

“அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார் கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தேற்றா தாங்கு

நாலடியார் 254, 257, 259, 260, 322. (10)

8. நிரைகோடல்

பகைவர் நாட்டின்மேல் படையெடுக்கக் கருதுவார் அதற்கு யாளமாக அவர்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருதல் நிரைகோடலாம். நிரை பசு; கோடல் - கொள்ளுதல் இச் செயலுக்குச் செல்வார் வெட்சிப்பூச் சூடிச் செல்வர் ஆகலின், இது 'வெட்சி' எனப்பெறும் ஆகோள், நிரைகவர்தல், ஆதந் தோம்பல் என்பனவும் இது.

"வெட்சி நிரைகவர்தல்” என்பது இலக்கணம்.

11.

நாளும் புள்ளும் கேளா வூக்கமோ

டெங்கோன் ஏயினன் ஆதலின் யாமத்துச்

செங்கால் வெட்சியும் தினையும் தூஉய்

மறிக்குரற் குருதி மன்றுதுகள் அவிப்ப

விரிச்சி ஓர்தல் வேண்டா

எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.

புறத். 1241.

(இ. ள்) நன்னாள் இதுவெனக் கணியன் வழிக் கேட்டும், புள்ளின் நற்குரல் தெளிந்தும் ஊக்கமிக்கு எம் தலைவன் எம்மை நிரைகோடற்கு ஏவினன் ஆதலின், இவ் யாமப் பொழுதில் மன்றத்தின் பூழ்தியை அடங்கச் செய்யுமாறு, செம்மறிக் கடாவை வெட்டி வீழ்த்திய குருதியால் நனைத்து, செவ்விய திரண்ட அடியையுடைய வெட்சியின் மலரையும், தினையையும் தூவி வீணே விரிச்சி கேட்டு நிற்றல் வேண்டா; பகைவர்