உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

89

நாட்டின்கண் உள்ள ஆநிரையை யாம் நம் மதிற்புறத்து. கொணர்ந்து தருதும் என்றவாறு.

து: யாம் பகைவர் ஆநி ஆநிரையைக்

-

நிறுத்துதும் என்பது.

ரையைக் கொணர்ந்து

(வி. ரை) இது நிரைகோடற்கு எழுந்த வெட்சி மறவன் கூற்றாகும்.

நாளும் புள்ளும் கேட்டு நல்ல செயலில் ஈடுபடுதல் தொல்பழ வழக்கு. நாள் கேட்டுச் செல்லுதலை வாள் நாட்கோள், குடை நாட்கோள் ஆகிய புறத்துறைகள் காட்டும். புள்ளொலி யறிந்து சேறலை,

"புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்”

என்பதால் அறியலாம்.

மன

லபடு. 448.

“நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்

பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப் பாடான் றிரங்கும் அருவிப்

பீடுகெழு மலையற் பாடி யோரே

99

என்னும் கபிலர் பாட்டால் இவ்விரண்டும் ஒருங்கே வருதல் அறிக. புள்ளொலி கேட்டு வருவது உரைப்பதைப் 'பிள்ளை வழக்கு' என்று கூறும் புறப்பொருள் வெண்பாமாலை, பிள்ளை, கரும்பிள்ளை என்னும் பறவை.

நாளும் புள்ளும் பார்த்தலே அன்றிப் ‘பல்லிஒலி' கேட்டுத் தெளிதலும் பண்டை வழக்காகும்.

“பன்மாண், ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்

பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்

கன்றுபுகு மாலை நின்ற’

தலைவியையும்,

“பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்

புருவைப் பன்றி”

(9)

(88)

வருதிறத்தையும் அகப்பாடல்கள் காட்டுகின்றன.

அன்றியும், பல்லி நல்ல கூறவேண்டும் என வேண்டுபவர்,