உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம்

12

‘பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறென நடுங்கி”னர்

எனவும், பல்லி தடுக்குமாயின் செல்லாது தவிர்தலை,

“முதுவாய்ப் பல்லி,

சிறிய தெற்றுவ தாயிற் பெரிய

ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்

நின்றாங்குப் பெயரும்”

(289)

(387)

எனவும் அகப் பாடல்கள் கூறாநிற்கும். அவ் வழியிலே தான் பிற்காலச் சத்திமுற்றப் புலவர்,

“பல்லிபாடு பார்த்திருக்கும் எம்மனைவி”

என்றதூஉம் என்க.

இனி விரிச்சி என்பது நற்சொல் ஆகும். உருவிலி (அசரீரி) என்பதுவும் அது. விரிச்சியின் இலக்கணத்தை,

"வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு ஈண்டிருள் மாலைச் சொல்லோர்ந் தன்று”

என்று கூறும் புறப்பொருள் வெண்பாமாலை.

L மாலை இருளில் வீரர் தெருவில் நிற்கின்றனர். அப் பொழுதில் ஒருவன், “குடக்கள் நீ கொண்டுவா” என்றான். அவ் நீ வொலியைக் கேட்டதும் “வெற்றி பெற்றேம்” என்று உவகை கூர்ந்தனர்; இது புறப்பொருள் வெண்பாமாலை தரும் விரிச்சி.

"எழுவணி சீறூர் இருள்மாலை முன்றிற் குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவிற் குடக்கள்நீ கொண்டுவா என்றான் குனிவில் தடக்கையாய் வென்றி தரும்’

99

- பு.வெ. 4.

இனி முல்லைப்பாட்டிலே, "இன்னே வருகுவர் தாயர்” என்பவள் மொழியை, “நன்னர் நன்மொழி” என்பதுவும் அது. ரிச்சி கேட்டு நிற்பவர் மறிவெட்டுதலும், வெட்சி மலரும் தினையும் தூவுதலும் ஆகிய வழக்குண்மையையும், விரிச்சி இருட்போதில் கேட்டலையும் இப் பாடலில் எடுத்தோதினார்.

நெல்லெறிந்தும், முல்லை அலரிப் பூக்களைத் தூவியும் விரிச்சி கேட்பார் என்பதை,