உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“நென்னீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்'

என்றும்,

“நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

91

புறம். 280.

முல்லை. 8-11.

என்றும் வருவனவற்றால் அறியலாம்.

வினைமேற்கொண்ட வெட்சிமறவன் தன்வீறு விளக்க

முறும் வண்ணம்,

“விரிச்சி ஓர்தல் வேண்டா

எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே”

என்றான்.

மறிக்குரல் குருதி

-

ஆட்டின் கழுத்தை அறுத்து ஒழுக

விட்ட குருதி. விரிச்சி கேட்பாரே அன்றி வெறியாடுவாரும் இவ்வாறு செய்வர் என்பதை.

“மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப் பிரீஇ"

என்பதால் காணலாம்.

- குறுந். 263.

விரிச்சியூர் என ஓர் ஊர் பாண்டி நாட்டகத்துண்மையும், அங்கே நன்னாகனார் என்னும் சங்கச் சான்றோர் ஒருவர் இருந்தமையும் இவண் கருதத் தக்கதாம்.

மேற்கோள்:

இத் தகடூர் யாத்திரையை மேற்கோள் காட்டி விரிச்சி விலக்கிய வீரக் குறிப்பு என்பார் நச். (புறத். 3)

9. நிரைமீட்சி

(11)

வெட்சி மறவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல். கரந்தைப் பூவைச் சூடிக்கொண்டு. பசுக்களை மீட்கச் செல்லுவார் ஆகலின் இது கரந்தை எனப்படும். ஆபெயர்த்துத் தருதல்” என்பதும் இது.

66

“மீட்டல் கரந்தையாம்” என்பது நிரைமீட்சியின் இலக்கணம்.