உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

12.

இளங்குமரனார் தமிழ்வளம்

நேரிசை யாசிரியப்பா

இருநில மருங்கின் எப்பிறப் பாயினும் மருவின் மாலையோ இனிதே; இரவின் ஆகோள் மள்ளரும் அளவாக் கானத்து நாம்புறத் திறுத்தென மாகத் தாம்தம் கன்றுகுரல் கேட்டன போல

நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே.

12

புறத். 1251.

இ - ள்) பரந்த உலகின்கண் எந்தப் பிறப்பே எனினும் தொடர்புடையவரைக் கூடும் தொடர்ச்சி, இன்பம் பயப்பதாம். நள்ளிருளில் நம் ஆக்களைக்கொண்டு சென்ற வெட்சி வீரரும் நெருங்குதற்கு அரிய காட்டில் நாம் சென்று புறத்துத் தங்கினேம் ஆக, அவண் நின்ற நம் ஆக்கள் தத்தம் இளங்கன்றின் ஒலி கேட்டதைப் போலத் தம் செவிகளை எடுத்து நம் ஒலிகேட்டு மகிழ்ந்தன என்றவாறு.

இ-து:- அளவாக்

லி

அளவாக் கானத்தும் ஆக்களின் அ அன்பால் மீட்டுதல் எளிதாயிற்று என்பது.

(வி.ரை) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது மாந்தரைச் சுட்டிய பொதுமைநிலை. உயிர்களின் அறிவுநிலை அமைதியைக் கொண்டு அறுவகையாக முந்தையோர் அறுதி யிட்டு உரைத்தனர் ஆகலின் எப்பிறப் பாயினும் என்றார்.

அவ்வறுவகைப் பிறப்புப் பகுப்பு, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என்பன. இதனை,

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கற வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”

என்பார் தொல்காப்பியனார்.

இவ்வாறறிவுயிர்களுள் ஆக்கள் ஐயறிவுயிராம்.

மரபு

27.