உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

66

இளங்குமரனார் தமிழ்வளம்

திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று”

என்பார் ஐயனாரிதனார். (பு. வெ. 58)

12

சோறு வழங்குவதுடன் வீரர்க்கு வேந்தன் மதுவும் வழங்குவான். அந்த மதுவிலும் களிப்புக் குறைவுடைய ய தெளிவைத்தான் அருந்திக்கொண்டு வீரர்க்குக் களிப்பு மிகத் தரும் கலங்கல் மதுவை வேண்டுமட்டும் வழங்குவான். ஆதலால் “தண்டேறல் மண்டி வழங்கி” என்றார். இதனை,

66

“எமக்கே கலங்கல் தருமே; தானே தேறல் உண்ணு மன்னே”

6

என ஒரு வீரன் கூற்றாகச் சங்கச் சான்றோர் ஆவியார் கூறினார் புறம். 298). கலங்கலாவது 'மண்டி' என்க. மதுக்குடத்துத் தெளிந்து மேலே நிற்பது தெளிவு; கீழே கலங்கலாக இருப்பது ‘கலங்கல் - மண்டி’. தெளிவினும் கலங்கல் களிப்பு மிக்கூட்டுவது என்பது இதனால் புலப்படும்.

வழு – குற்றம். வழீஇயதற்கோ - தவறு செய்ததற்காகவோ என்றது பழிப்பதுபோலப் புகழ்ந்தது. “இத் தவறுக்காகவோ யிர்நேர்ந்தார்” என்றது வியப்பு.

கொண்டி - கொள்ளை. கொண்டி மறவராவார் பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதலில் தேர்ந்த வீரர். “தண்டமிழ் வரைப்பகம் கொண்டியாக" என்றார் பேரி சாத்தனார் (புறம்.198)

மறலிக்கு உயிர் நேர்ந்தார் ஆகலின் மன்னர்க்கு ‘உறவிலர்’ என்றும் ‘கண்ணோடார்' என்றும் அங்கத வாய்பாட்டால் புகழ்ந்தார்.

வீரருள் தன்னை மேம்படுத்து உடனுண்டு, மண்டி வழங்கிய மன்னன் செயலுக்கு நன்றி மறவாமைப் பொருட்டு மறலிக்கு உயிர்நேர்ந்தது உறவின்மையும் கண்ணோடாமையும் ஆமோ எனின் ஆகாது, அவன் ‘பெரும்பிறிது உற்றான்’ ஆகலின் அவன் செஞ்சோற்றுக் கடன் கழிப்பினை இவ்வாறு நயமுறப் பாராட்டினார் என்க.

வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்தார் பலராகப் பின்னே வந்த கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் என்பார்.