உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“புலவுதி மாதோ நீயே”

97

- (புறம். 219)

என்று தம்மை நொந்து மொழிந்ததையும், பாரி தம்மை விடுத்துப் பெரும் பிறிது உற்றானாகக் கபிலர்,

“மலைகெழு நாட மாவண் பாரி

கலந்த கேண்மைக் கொவ்வாய் நீஎற் புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்(கு) ஒல்லா(து) ஒருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி

இனையை யாதலின் நினக்கு மற்றியான் மேயினேன் அன்மை யானே

என்று உருகி நின்று உரைத்தமை 'உறவின்மை' என்பதன் நயப்பொருளை நன்கு வலியுறுத்தும்.

இனித் தன்னைப் புரந்த தலைவன் போருக்கு முந்துக என ஏவாமையால் 'இன்னான்' என வீரனால் கருதப்பெறுவான் என்பதை, “எமக்கே கலங்கல் தருமே; தானே, தேறல் உண்ணு மன்னே; நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே, நேரார் ஆரெயில் முற்றி, வாய்மடித்துரறிநீ முந்தென்னானே

என்பதனால் தெளிக (புறம். 298)

வேந்தர்க்கு வீரர் உயிர் வழங்குதலைப் பிறவிப்பேறாகக் கருதிப் பேருவகை யுற்றமை பெருவழக்காகும்.

“கொன்னுஞ் சாதல் வெய்யோன்"

  • புறம் 291.

“புட்பகைக் கேவான் ஆகலின் சாவேம்யாம்

- புறம். 68.

என்பனவும்,

“உறின் உயிர் அஞ்சா மறவர்"

- திருக் 778.

“புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா

டிரந்துகோள் தக்க துடைத்து”

- திருக். 780.

என்பனவும் கருதத்தக்கன.

சிற்றிளமைப் பருவத்தும் கொற்றவற்கு உயிர் கொடுத்தவனே பெருமூதாளன்; “கொற்றவனுக்கு உற்றபோது உயிர்தாராதார் பெருமூதாளராயினும் சிற்றிளையரே” என்று மேலே இவர் வலியுறுத்துவார் (23). ஆண்டுக் காண்க.