உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மேற்கோள்:

இளங்குமரனார் தமிழ்வளம்

12

“பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை" (தொல். புறத். 8) என்பதற்கு உரை விரித்த நச்சினார்க்கினியர் "கள்ளும் பாகும் முதலியனவும் அப்பாற்படும்" என்று கூறி இப் பாட்டை எடுத்துக் காட்டினார். 'மறவர் மறமிக்கு' என்பது அவர் கொண்ட பாடம்.

11. பாசறை

(14)

வேந்தனும் வீரரும் தங்குதற் கெனக் களத்தின் அருகில் அமைக்கப் பெறும் குடியிருப்பு பாசறை எனப்படும். கட்டூர், பாடி என்பனவும் இது.

பாசறை அமைதியை முல்லைப் பாட்டினுள் விரியக்

காண்க.

15.

நேரிசை யாசிரியப்பா

குழிபல ஆயினும் சால்பா னாதே; முழைபடு முதுமரம் போலெவ் வாயும் மடைநுழைந் தறுத்த இடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்றல் ஆனாது பையென மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர் கொடைக்கடன் ஆற்றிய வேந்தர்க்குப் படைக்கடன் ஆற்றிய புகழோன் புண்ணே.

புறத். 1274.

இ-ள்) குற்றமின்றிக் கொடைக் கடமையைக் குறையாமல் செய்து முடித்த வேந்தர்க்குத் தான் செய்யத்தக்க படைக் கட மையைப் பண்போடு முடித்துக் காட்டிய புகழ்வாய்ந்த வீரன் எய்திய போர்ப்புண், குழிபலவாகிக் காண்போர்க்கு இனி இனிமை செய்யா தொழியினும் அதன் சீர்த்திக்கு ஓர் எல்லை இல்லையாய் உயர்ந்ததாகும். நெடுங்காலம் வளர்ந்து பொந்து விழுந்துபட்ட மரம்போல உடலின் எவ்விடத்தும் படைக்கலம் துளைத்து ஊடறுத்துச் சென்று தோன்றும் அகன்ற புகய்ப் புண்களில் மருந்துநெய் நில்லாது வறிதே கழிகின்றது. ஆதலின் மெல்லென மெழுகினால் செய்யப்பெற்ற பாவையைத் துணியால்