உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

99

பொதிந்து வைப்பதுபோல மிகுந்த துணிகளைக் கொண்டு உடல் முழுவதையும் பொதிந்து மூடுதல் வேண்டும் என்றவாறு. வேந்தன் தலையளி செய்தமைக்குக் குறையா

-

து: :

-

வண்ணம் வீரன் கடமை புரிந்தான் என்பது.

(வி- ரை) பொருது புண்பட்ட வீரனைப் பாசறைக்கண் சேர்ப்பித்துப் புண்ணைப் பரிகரித்த வீரர், அவன் மேம்பாடு தோன்ற விளம்பியது இது.

வேந்தன் கொடைக் கடனையும், வீரன் படைக் கடனையும் நினைவார்க்குப் புலவர் பொன்முடியார் பாடிய.

66

"ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'

புறம்.312

என்னும் மூதின் முல்லைப்பாட்டு நினைவுக்கு வருதல் ஒருதலை.

அஞ்சாது பொரும் வீரர் உடலில் கரும்புண்ணும் செம்புண்ணும் வடுவும் குழியும் மேடும் விளங்கும். அத் தோற்றத்தை,

"மருந்து கொள் மரத்தின் வாள்வடு மயங்கி'

என மதுரைக் குமரனார் பாடுவர் (புறம். 180)

வீரன் உடல் அழகின்றிக் காணினும், அவன் வீரப் புகழ் கேட்பார்க்கு மிக அழகுடையதாகும். இத் தன்மையையும் மதுரைக் குமரனார் ஏனாதி திருக்கிள்ளியைப் பாடுங்கால். "நீயே, அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர் நிற்றலின்

வாஅள்வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின்னாயே;

அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின்

ஊறறியா மெய்யாக்கையொடு

கண்ணுக் கினியர் செவிக்கின்னாரே

அதனால், நீயும்ஒன் றினியை அவருமொன் றினியர்'

என நயமுறப் பாடினார். ஆகலின்,