உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம்

12

66

'குழிபல ஆயினும் சால்பா னாதே”

என்றார். முதிய மரத்தில் பொந்துகள் உண்மையை,

“நிலம்பக வீழ்ந்த அலங்கற் பல்வேர்

முதுமரப் பொத்து’

புறம். 364

என்றார் கூகைக் கோழியார். முதுமரம் புளியும், ஆலும் போல்வனவாம்.

“புளி ஆயிரம் பொந்து ஆயிரம்”

என்னும் பழமொழியும்,

"தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன

எனவரும் சிந்தாமணிப் பாட்டும் (498) கருதுக.

படை - மூட்டுவாய்; துளையுமாம். பிடிகாறும் உட்புகுந்து அறுத்துச் சேறலின் ‘மடை நுழைந்து அறுத்த இடனுடை விழுப்புண்' என்றார்.

விழுமம் - சிறப்பு. விழுமம் புண் என்பது விகாரப்பட்டு “விழுப்புண்' என நின்றது. ‘விழுத்திணை' என்பது போல (புறம்.24) விழுப்பத்திற்கு இடனாகிய புண் விழுப்புண் என்க. இதனை, “முகத்தினும் மார்பினும் பட்ட புண்” என்பர் (திருக்.776. பரிமே.)

குழிப் புண்ணை ஆற்றுதற்கு மருந்து எண்ணெய் தோய்த்த துணியையும் பஞ்சையும் புண்வாயிற் பொதிந்து வைப்பர். அவ்வாறு தனித்தனியே வைக்க இயலாமையும், வைப்பின் நில்லாமையும், ஆழ்ந்து அழன்று இருத்தலாலும் உடல் முழுவதும் கிழியால் பொதியல் வேண்டும் என்றார். பொதிதல் மூடுதலும், கட்டுப்போடுதலும் ஆகும்.

மெழுகு - அரக்கு. அரக்கால் அமைந்த கருவில் செய்யப்

பெற்ற பதுமை. இதனை,

"மெழுகு ஆன்று. ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி”

குறுந். 155.

என்பதனாலும் அதன் உரையாலும் அறிக. இனி மெழுகால்

செய்யப் பெற்ற பாவை எனினும் ஆம்.

“மெழுகுசெய் படம்” என்றும் (நெடுநல்.159) “மெழுகுசெய் பாவை” என்றும் (பெருங் 2: 17. 115) "மெழுகினாற் புனைந்த பாவை என்றும் (சீவக 1386) வருவன காண்க.

17.115)