உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

101

கருவில் பொதிந்து பாவை செய்தல்போல இவற்குப்

பொதிந்து புண்ணைப் பரிகரித்தல் வேண்டும் என்றார் என்க.

“பஞ்சியுங் களையாப் புண்ணர்

என்றும்,

“நெய்க்கிழி வைக்கப் பட்டார்”

என்றும் சான்றோர் கூறுவனவும்,

66

“விழுப்புண், நெய்யிடைப் பஞ்சு சேர்த்தி”

புறம். 353

சீவக. 818

என்று இந் நூலுடையார் மேலே கூறுவதும் (28) புண்ணுக்கு நெய்த்துணி பொதிந்து வைத்தலைக் காட்டும்.

புண்ணுடையாற்கு

நெய்க்கிழி வைத்துப் பேணிக் காப்பதுடன் புள்ளும், நரியும் பேயும் நெருங்காது காக்கும் புள்ளும்,நரியும் கடமையும் மேற் கொண்டனர் என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

"சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர் தூவெள் எறுவை மாயோற் குறுகி

இரும்புள் பூசல் ஓம்புமின் ; யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்”

என்றும் (புறம். 291)

66

‘தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மைவிழு திழுகி

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி

இசைமணி எறிந்து காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்

காத்தல் வம்மோ காதலம் தோழி

வேந்துறு விழுமம் தாங்கிய

பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

وو

என்றும் (புறம். 281) வருவனவற்றால் அறிக.

(15)