உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம்

12. வஞ்சினம் – 1

1

12

ன்ன செயலைச் செய்து முடியேனேல் யான் இன்ன தன்மையன் ஆவேன் எனச் சூளுரைத்தல்.

16.

இன்னது பிழைப்பின் இதுவா கியர்எனத்

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்”

நேரிசை வெண்பா

செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த கௌவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட இல்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து.

-தொல். புறத். 24.

புறத். 1301.

-ள்) “போர்ச்செவ்வி அமைந்த ஆண் யானையின் திரண்ட மத்தகத்தில் யான் எறிந்த. பகைவரைக் கலக்கவல்ல நீண்டவேலை, நாளை விடியும் அளவில் சென்று பறித்துக் கொண்டு வராதொழிவேனேல், எம் தங்கை மணங்கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்று, அவள் கையை எதிர்பார்த்து வாழ்வேன் ஆவேனாக" என்றவாறு.

இ-து:- யானையின் நெற்றியில் பாய்ச்சப் பெற்ற என் வேலைப் பறித்து வாராது விடேன் என்பது.

(வி-ரை) முதனாள் மூண்டெழுந்த போரில் ஒருவீரன் தன் கைவேலை யானையைக் குறிவைத்து ஏவ. அவ்வேல் யானையின் நெற்றிக்கண்பட்டு வீழாது குத்தி நின்றது. அஞ்சிய களிறு போர்க்களத்தினின்று வெருண்டோடி; ஒளிந்தது; காரிருள் கப்பிக்கொண்ட பொழுது ஆகலின் களிற்றைக் காணற்கியலாமல் கதுவிய சினத்தால் அவ் வீரன் "விடிவளவில் சென்று வேலைப் பறிப்பேன்" எனச் சூள் உரைத்தது இது.

வேல் சிறந்த படைக்கலமாகச் சான்றோரால் கொள்ளப் பெற்றமை.

“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”

என்பதனாலும், வேலால் யானையை வீழ்த்துதலை தகவு

என்பது,