உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும் “களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”

என்பதனாலும்,

“கானமுயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது'

“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்’

என்பவற்றாலும் புலனாம்.

103

திருக். 772.

- திருக். 774.

வேலைக் களிற்றின் முகத்தில் ஏவுதலைச் ‘செம்மத்தகத்து’

என்றார்.

"வேலோ, பெருங்களிற்று முகத்தினும் செலவானாதே”

என்றார் புறத்தினும் (332)

கடாக்களிற்றின்மேல் ஏவப்பெற்ற வேலைப் பறிக்காது விட்டுவருதல் குடிப்பழியாகும் செயலென்று மறக்குடி மக்கள் கருதினர் என்பது இத் தகடூர் யாத்திரையால் விளங்கும். மேலே, “புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம்

அதன்முகத் தொழிய நீபோந் தனையே; எம்மில் செய்யா அரும்பழி செய்தனை’

என்று தன் மைந்தன் செயலுக்கு நாணி மறக்குடி மங்கை உரைத்ததும் (41) இக் கருத்தை வலியுறுத்தும்.

ஆகலின் தம்மில் செய்யாப் பழியைத் தான் செய்ததாகா

வண்ணம்,

“கௌவை நெடுவேல் கொணர்வேன்'

என்றான். நினைத்தவர்க்குக் கலக்கத்தை ஊட்டுதலின் கௌவை நெடுவேல் என்றான். இனிக் குடிப்பழிக்கு இட டஞ் செய்தது என வருந்திக் கௌவை நெடுவேல் என்றானுமாம். நெடியவேலாய் இருந்தும் பயன் என்னை? குடிப்பழிக்கு இடனாயிற்றே என்ற உளைவினால் கூறினானாம். கௌவை - பழிச்சொல்.

எவ்வை என்பது முறைப்பெயர். எம் தங்கை என்பது. தவ்வை மூத்தாளையும், அவ்வை அன்னையையும் குறித்தல் போன்ற முறைப்பெயர்.