உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன் உள்ளழித்துப் புகேஎன் ஆயின் உள்ள(து)

இரப்போன் இன்மை கண்டும்

கரப்போன் சிறுமை யானுறு கவ்வே.

105

-புறத். 1304

இ-ள்) மனஞ்செருக்கிய குதிரை வீரனே, மனஞ் செருக்கிய குதிரை வீரனே, பாம்புபோன்ற நல்ல நீண்ட பெரிய கையினையும் வெவ்விய சினத்தையும் கொண்ட யானையையுடைய மனஞ் செருக்கிய குதிரை வீரனே, புதுவெள்ளப் பெருக்குப் போன்ற படையை உடைய நும் வேந்தனுக்கு ஒப்பான வீரன் முன்னே படையின் உள்ளே ஊடறுத்துக் கொண்டு புகாமல் ஒழி வேனேயானால் தன்னிடத்தில் உள்ள ஒன்றை (,) இரப்பவனது இல்லாமையைக் கண்கூடாக் கண்டும் அதனை ஈயாமல் மறைப் பவனது இழிவை யான் உறுவேனாக என்றவாறு.

து:- ஊடறுத்துக் கொண்டு படையின் உள்ளேயான் புகுவது உறுதி என்பது.

(வி - ரை) “கலிமானோயே புகேஎனாயின் சிறுமை யான் உறுகவ்வே” என இயைக்க.

கலிமான் குதிரை; குதிரை மேலிருக்கும் வீரனைக் 'கலிமானோயே!' என விளித்தான். கலிமான் என்பது யாண்டும் யானையைச் சுட்டிற்றில்லை யாகலின் ‘யானைப் பாகன்’ எனக் கொள்ளாமல் “யானையையுடைய மனஞ்செருக்கிய குதிரை வீரனே" என்றாம். “கடாஅ யானைக் கலிமான் பேகன்' எனச் சான்றோர் கூறிய தறிக. (புறம். 141, 145) இனிக் கலிமானோயே என்றது குதிரை 'வாதுவனை'க் குறித்தது எனினும் ஆம். கலிமானோயே என்பது 'வாயிலோயே என்பதுபோல்' விளியேற்று நின்றது. (சிலப். 26. 24)

மீகான் என்பது போலக் கலிமான் என்பது இயக்குவோன் என்னும் பொருட்டதாயின், 'யானைவாதுவன்’ என்பது இயல்பாய் அமையும். என்க. யானையின் கை பாம்பன்னது என்பதை.

“வேழத்துப், பாம்பு பதைப்பன்ன பரூஉ க்கை”

-

-முல்லை. 69-70

என்றார் நப்பூதனார். தடக்கை பெரியகை; இனி எழுந்தாடும் பாம்பு போன்ற கையுமாம். தட என்னும் உரிச்சொல் பெருமையும் வளைவும் தருமாறு அறிக. (தொல். உரி. 22, 23)