உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம்

12

வெள்ளத்தானை- வெள்ளப்பெருக்குப் போல் பெருகி வரும் படை. இதனை, ‘ஆளமர் வெள்ளம்' என்றார் ஐயனாரிதனார். (பு. வெ. 32) “வேற்றானை வெள்ளம்” என்றார் இந் நூலுடையாரும்

(21).

படைத்தலைவனையோ, தறுகண்மை மிக்க வீரனையோ வேந்தனொடு ஒப்பிடுதல் வழக்கு ஆதலின் ‘வேந்து ஒப்பான் முன்' என்றான். சோழன் படைத்தலைவனாம் கருணாகரன் கொண்ட கலிங்க வென்றியைக் கருதிச் செயங்கொண்டார் "கலிங்கம் எறிந்த கருணாகரன்” என்றதைக் கருதுக.

உள் அழித்துப் புகுதல் என்பது உட்புகவிடாது எதிரிட்டு நிற்கும் படையை அறுத்துக் கொண்டு உள்ளே சென்று அதரி திரித்தலாகும்.

“படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம்

-தொல். புறத். 17.

என்பது பகைவர் படைக்கலங்களை அழித்து வெற்றி கொள்ளும் வலிமையாவதுடன், படையை ஊடறுத்துச் சென்று காட்டும் வலிமையையும் குறிக்குமாறு இரட்டுற நின்றமை இத் தகடூர் யாத்திரையால் புலப்படும்.

படையாண்மை மீக்கூர்ந்தவனாகிய இவ் வீரன் கொடை யாண்மையும் மீக்கூர்ந்து விளங்கியவன் என்பதை இவன் கூறும் வஞ்சினம் நன்கனம் காட்டும்.

ஈத்துவக்கும் இன்பம் எய்துமாறு ஒருபொருளை வைத் துள்ளான். அப் பொருளை இல்லாதவன்- இன்றியமையாது வேண்டியவன் - இழிவு எனக் கருதாது வந்து இரக்கின்றான். அவன் நிலைமையைச் செவ்விதிற் றான் கண்டுவைத்தும் ஈயாது இவறுகின்றான். இவனுக்கு எய்துவது சிறுமையே அன்றோ! அவன் எய்தும் சிறுமையைப் "படையை உள்ளழித்துப்புகேஎன் ஆயின் யானும் உறுவேனாக” என்று சூளுரைக்கு முகத்தால்,

“உள்ளழித்துப் புகேஎன் ஆயின் உள்ளது இரப்போன் இன்மை கண்டும் கரப்போன் சிறுமை யானுறு கவ்வே

என்றான்,

“ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” என்பதால் கரப்போன் எய்தும் சிறுமையும்,

-புறம். 204