உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“புரப்போர் புன்கண் கூர

இரப்போர்க் கீயா இன்மையான் உறவே"

107

-புறம். 72.

என்பதால் ஈயாமை இழிவென

வஞ்சினங்

கூறும்

வழக்குண்மையும் கொள்க.

ஈயாமை இழிவு' என்பதை,

“தொலைவாகி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவென மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?" "இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இளிவெனக்

66

கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ?' “இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவெனக்

கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?” எனவரும் கலித்தாழிசை மும்மடி வலியுறுத்துமாறு அறிக. (கலித். 1)

உறுகவே என்பது ‘உறுகவ்வே' என ஒற்று விரிந்து நின்றது. நெல்விளையும்மே' 'பழமூழ்க்கும்மே' என்பவற்றிற் போல (புறம். 109).

யாப்பமைதி:

66

கலிமானோயே...

கலிமானோயே” என்பது

"பல்சான்றீரே.... பல்சான்றீரே" என்பது போன்ற யாப்புறவில் நின்றது. (புறம். 195, 246, 301) இத் தகடூர் யாத்திரையுள்ளும் மேலே இவ்வாறு வருவனவும் காண்க. (27, 41)

13 . படைச் செருக்கு -1

(17)

படையினது வீர மிகுதியையும் வெற்றிச் சிறப்பினையும்

கூறுதல். படைவீரர் செருக்கிக் கூறுதலுமாம்.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு

- திருக். 773.

66

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

-திருக். 771

முன்னின்று கன்னின் றவர்'