உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

18.

இளங்குமரனார் தமிழ்வளம்

12

ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா

கூற்றுறழ் முன்பின் இறைதலை வைத்தபின் ஆற்றி அவனை அடுதல்; அடாக்காலை

ஏற்றுக் களத்தே விளிதல்; விளியாக்கால்

மாற்ற மளவும் கொடுப்பவோ சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து.

-புறத். 1314. இ-ள்) வேந்தன் தலையளி செய்தபின்னை, கூற்றையும் எதிரிட்டு நிற்கும் ஆற்றலுடன் தன்னை எதிர்த்தவனை அழிக்க; அவ்வாறு அழிக்க முடியாப் பொழுதில் அவன் தாக்குதலை ஏற்றுப் போர்க்களத்தே இறக்க; அவ்வாறு இறவாக்கால் வீரர்தம் பீடும் பெருமையும் இழந்து சொல்லளவால்கூட பெருமை தருவரோ? தாரார் என்றவாறு.

(இ ள்) பகைவென்று வருதல், அல்லது களத்தில் பட்டழிதல் ஆகிய இரண்டுள் ஒன்றே வீரர்க்குப் பெருமையும் பாராட்டும் தருவது என்பது.

(வி - ரை) கூற்றுறழ் முன்பு - கூற்றுவனையும் எதிர்க்கும் ஆற்றல். வீரற்கே அன்றி இறையொடு இயைப்பினும் ஆம்.

-

தலைவைத்தல் தலையளி செய்தல். உடனிருத்தல், சோறளித்தல், படைக்கலம் வழங்கல், பாராட்டெடுத்தல், பரிசு வழங்கல் முதலியன. தலைவைத்தல் - தலைவனாக வைத்தலுமாம். தலையளி கருதி வீரர் கடனாற்றுதலை முன்னே கண்டாம். (14, 15)

-

ஆற்றியவன் - எதிர்த்துத் தாங்கியவன். ஏற்று தாக்குதலைத் தான் ஏற்று. விளிதல் - இறத்தல்.

வேந்தன் கூற்று ஒத்தலை,

“கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்”

66

கூற்றத் தன்ன மாற்றரு முன்பு"

என்றும் சான்றோர் கூறினர்.

வீரன் கூற்றொத்தலை,

“கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும் ஆற்ற லதுவே படை

99

என்றார் திருவள்ளுவர்.

-புறம். 56

-புறம். 362

(765)