உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

109

வீரர்கள் போர்க்களத்தில் சாக விரும்புதலை, “மறவர் மறலிக்குயிர் நேர்ந்தார்" என்பதனாலும் (தக. 14) “புட்பகைக் கேவான் ஆகலிற் சாவேம்” (புறம். 68) என்பதனாலும் “உறின் உயிர் அஞ்சா மறவர்” (திருக். 778) என்பதனாலும், “மூப்பிலும் பிணியிலும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தோரே துறக்கம் பெறுவர்” (தொல். அகத். 44. நச்) என்பதனாலும் அறிக.

பிறரை அடுதலாலும், தான் விளிதலாலும் வீரற்கு வரும் புகழையும் பேற்றையும் வரும் பாடலில் கூறுவார் (19) வீறுடன் பொருது வீழ்ந்த வீரனைப் பகைவீரரும் பரிந்தேத்துவர்; பண்ணிசைத்துப் பாராட்டுவர். இதனை,

“ஆளுங் குரிசில் உவகைக் களவென்னாம்? கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து

என்பதனால் அறிக. (தொல். புறத். 17. மேற். நச்.)

இனி, வீரவழிபாட்டைக், “காட்சி கால்கோள், நீர்ப்படை நடுகல், சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்” என்னும் புறத்துறைகளின் வழியாகவும் (தொல். புறத். 5) போர்க்களத்தில் பொருது மாண்டோரே ‘அமரர்” எனப் பெற்றனர் என்னும் சொல்லமைதி வழியாகவும் அறியலாம்.

“நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்"

எனவரும் அகப்பாட்டடிகளால் (67) வீரர் பெயரும் பீடும் நடுகல்லில் எழுதியமையும், பெருவழியில் அதனை நாட்டியமையும்,

6

“படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'

“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியோ

டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்

தினிநட் டனரே கல்லும்”

“நடுகற் பீலி சூட்டி நாரரி

சிறுகலத் துகுப்பவும்”

புறம். 260

- புறம். 264

புறம். 232.