உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம்

12

66

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தனெக் கல்லே பரவின் அல்லது

நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலவே’

99

புறம். 335.

எனவரும் புறப்பாட்டிகளால் நடுகல்லுக்குப் பந்தரிட்டதுவும், கண்ணிபீலி முதலியவை சூட்டியதுவும், கள்ளைப் படைய லிட்டதுவும், பரவியதுவும் தெளிவாகும். இனி உயிர்ப்

பலியூட்டினர் என்பதும் துடிப்பறை கொட்டினர் என்பதும்,

“வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்”

என்பதால் விளங்கும் (அகம். 35)

மாற்றம் - சொல். மாற்ற மளவும் - சொல்லளவில் கூட.

66

வியத்தக்க, அல்ல எனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்பர்” என (தக. அவை) அறிவுக்களத்தின்கண் சான்றோர் சால்பு அமையுமாயினும், அமர்க்களத்தின்கண் அஃதின்று என்பாராய், “சான்றோர் தம் தோற்றமும் தேசும் இழந்து மாற்றமளவும் கொடுப்பவோ?” என்றார்.

தோற்றம் - பெருமிதமான காட்சி. தேசு - ஒளி; அஃதாவது “பிறர்க்கு அச்சமுண்டாவதற்குக் காரணமான நன்மதிப்பு” என்பார் பரிமேலழகர். (திருக். 698).

இறைதலை வைத்தபின் அடுதல்;

அடாக்காலை

விளிதல்; விளியாக்கால் சான்றோர் தோற்றமும் தேசும் இழந்து மாற்றமளவும் கொடுப்பவோ? என இயைக்க.

13. படைச் செருக்கு - 2

பலவிகற்பப் பஃறொடை வெண்பா

19. தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாமவற்

கொற்கத் துதவினான் ஆகுமால் - பிற்பிற் பலரேத்தும் செம்மல் உடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர்

(18)