உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

மேன்மை இழப்பப் பழிவருப செய்பவோ

தாமேயும் போகும் உயிர்க்கு.

111

புறத். 1313.

(இ-ள்) ள்) உயிர் வாளா தானேயும் போய் ஒழியும்: அவ்வுயிர்க்குத் தன்னை அன்பால் ஆண்டுகொண்ட பெருவீறு படைத்த வேந்தன் மகிழுமாறு உற்றபொழுதில் ஓடிப்போய் உதவினார் என்னும் பேறுஉண்டாம்; அன்றியும் பின்னரும் பெரும் பாராட்டும் பெருமிதமும் உண்டாம்; பலரும் தொழுது ஏத்தும் அமர வாழ்வும் அமையும்; அத்தகைய பெறற்கரும் பேறுகளை இழக்குமாறு ஒழியாப் பழிவரும் செயலைச் சான்றோர் செய்வரோ? செய்யார் என்றவாறு.

து:

-

ச்சாவு;

"பொருகளத்தில் உயிர்விடுதலே புகழ்ச்ச மற்றையவை புன்மைச் சாவு” என்பது மறக்குடி மாண்பு.

W

(வி-ரை) தற்கொள் பெருவிறல் வேந்து தன்னைத் தலையளி செய்துகொண்ட வேந்தன். ஓற்கம்- தளர்ச்சி. வறுமைப் பொருளும் தருவதாயினும் ‘வேந்தன்' ஆகலின் அப்பொருள் பொருந்தாதாம். ஒல்குதல் அடியாகப் பிறந்த சொல் ஓற்கம்.

66

'கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு

ஓற்கத்தின் ஊற்றாம் துணை

என்பதனால் ஒற்கம் இப்பொருட்டதாதல் கொள்க.

திருக். 414

காலத்தினால் செய்யும் உதவியே ஞாலத்திற் பெரிது

ஆகலின் ‘ஒற்கத்துதவுதலின்’சிறப்பு, தானே போதரும்.

66

“கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண்

தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால்

ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன்

எச்சத்துள் ஆயினும்அஃ தெறியாது விடாதே காண்'

என்னும் கலித்தாழிசையால் (149) ஒற்கத்துதவுதல் மாண்பும், உதவாமையால் வரும் கேடும் விளங்கும்.

வேந்து உவப்ப ஒற்கத்து உதவிய ஒருவனைப் பற்றிய,

“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

வாங்குமருப் பியாழொடு பல்லியம் கறங்கக்

கைபயப் பெயர்த்து மையிழு திழுகி

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி