உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம்

இசைமணி எறிந்து காஞ்சி பாடி

காக்கம் வம்மோ காதலம் தோழி

நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்

வேந்துறு விழுமம் தாங்கிய

பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே”

12

என்னும் புறப்பாட்டு (281) உன்னுந்தோறும் உருக்குவதாதல் அறிக. உற்றுழி உதவியும்' என்னும் தொடரும் (புறம். 183) அதற்குத் “தன்னாசிரியர்க்கு ஓர் ஊறுபாடு உற்றவிடத்து அது தீர்த்தற்கு வந்து உதவியும் என்னும் பழைய உரையும் கருதற்குரியன.

பலரேத்தும் செம்மலும், வானுறை வாழ்க்கை இயைதலும் முன்னும் கண்டாம் (18).

செம்மல் - தலைமை;

“திறப்பட, நண்ணார் நாண அண்ணாந் தேகி

ஆங்கினிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்

மண்ணாள் செல்வம் எய்திய

நும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே

என்பதை நோக்குக.

99

- புறம். 47.

சான்றோர் பழிவருப செய்யாமையை, “பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”

என்பதும்,

‘உறையார் விசும்பின் உவாமதி போல

நிறையா நிலவுதல் அன்றிக் - குறையாத

வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வான்மையார் சால்பு

என்பதும்,

66

""

புறம். 182

பு. வெ. 185

மானம் என்னும் அதிகாரத் தொடக்கத்தில், (திருக். அதி. 97) னி, குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடங்கி முதற்கண் மானம் கூறுகின்றார். அஃதாவது எஞ் ஞான்றும் தம் நிலையில் தாழாமையும் தெய்வத்தால் (ஊழால்) தாழ்வு வந்துழி உயிர்வாழாமையுமாம். இஃது அக்குடிச் சிறப்பினை நிறுத்துதல் உடைமையின் அச் சிறப்புப் பற்றி