உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

113

முன்வைக்கப்பட்டது” எனப் பரிமேலழகர் குறிப்பதுவும்

வலியுறுத்தும்.

66

‘குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு”

ஆகலானும்.

“நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்றான்”

என்பது உலகியல் ஆகலானும்,

“உரிகளை அரவம் மானத் தானே

அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே

– திருக். 333

- நாலடி. 29

புறம். 260

என்னும் மெய்யுணர்வு, பழஞ்சான்றோர்க்கு இருந்தது ஆக லானும்,

"தாமேயும் போகும் உயிர்க்கு'

என்றார்.

வறுமொழி கூறலும், பயனில கூறலும் பழியெனக் கருதிக் கடிந்துரைத்த சான்றோர் வறிதே ஒழியும் உயிர்வாழ்வை ஏற்பரோ? ஏற்கார் என்க. “தம்புகழ் நிறீஇத் தாம் மாய்வதையே” (புறம். 165) வாழ்வெனக் கொண்டார் ஆகலின்,

66

“தானை யானை” என்னும் புறத்திணையியல் நூற்பாவில் (17) போர்த்தொழிலால் தானைநிலை என்பதற்கு இத் தகடூர் யாத்திரையை மேற்கோள் காட்டினார் நச்.

இளம்பூரணரும் இதனை இந் நூற்பாவில் மேற்கோள்

காட்டி, “இஃது ஒருவீரன் கூற்று” என்றார்.

(19)