உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

-

115

ஞாட்பு போர்க்களம். போர்க்களம் புக்கு வீறுகாட்டி னார்க்குப் பீடும் பெருமையும் உண்டாதலை முன்னும் கண்டாம்; மேலும் வரும்.

வேற்றுக் களத்தில் ஒருவர் தமராகச் செல்லுதல் துப்பாகச் செல்லுதல். துப்பு வலிமை.

66

-

வீயாத்திருவின் விறல்கெழு தானை

மூவருள் ஒருவன் துப்பா கியரென ஏத்தினர் தரூஉம் கூழே நும்குடி

வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே

புறம். 122 என்பதால் மூவேந்தருக்கும் ஓரொருகால் மலையமான் திரு முடிக்காரி துப்பாகச் சென்றதும், அதற்கெனப் பொருள் பெற்றதும் தெளிவாம். மேலும், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடிய புறப் பாட்டினாலும் (125) "முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் என்னும் குறுந்தொகையினாலும் (312) விளக்கமுறும்.

“புண்ணும் படுக்கலார்; தாம்படார்

இழிவுறுதலை,

66

து

“ஆற்றி யவனை அடுதல்; அடாக்காலை

ஏற்றக் களத்தே விளிதல்; விளியாக்கால்

மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தம்

தோற்றமும் தேசும் இழந்து”

என்று முன்னே இந் நூலுடையார் கூறியமையாலும் (18) தெளிக.

கவலையால் கண்ணுறக்கங் கொள்ளாமையை,

“நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே'

என்றார் கோவூரார் (புறம். 31).

66

"படுங்கொல் - படுதலும் கூடுமோ என எள்ளியது. படைச் செருக்குடைய வீரன் ஒருவன் 'விழுப்புண் படாது” தம் நாளை வழுக்கினுள் வைத்து வறிதே யொழிவாரை நோக்கி, அவர்கள் நொய்மையை எள்ளித் தன் வீறு தோன்ற நுவன்றது இது. (20)