உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் 12

13 . படைச் செருக்கு - 4 பலவிகற்பப் பஃறொடை வெண்பா

வேற்றானை வெள்ளம் நெறிதர - ஆற்றுக்

21.

கடும்புனற் கற்சிறை போல - நடுக்காது

நிற்பவற் கல்லால் எளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுநர் என்னும் செருக்கு.

புறத். 1317

இ-ள்) அழகமைந்த தளிரும் இலையும் மிடைந்த கண்ணி சூடிய பறையன்ன பருத்த தோளுடைய மன்னரால் அறியப் பெறுநர் என்னும் பெருமிதம், வேற்படை வீரராகிய வெள்ளம் பெருக்கெடுத்து மோதிவர, ஆற்றிற் கடுகிவரும் வெள்ளத்தைத் கற்சிறை தடுக்குமாப் போலத் தடுத்து நடுங்காது நிற்பவற்கு அல்லாமல் பிறர்க்கு எளிதாமோ? என்றவாறு.

-

இ - து: பகை வெள்ளத்தைத் தடுத்துக் கற்சிறைபோல் நிற்பவற்கே அரசறியும் பெருமை யுண்டாம் என்பது.

(வி-ரை) இதுவும் பெருமிதம் அமைந்த வீரன் ஒருவன் கூற்றேயாம். அன்றிச் சான்றோர் கூற்று எனினும் அமையும். நாட்டுப் பற்றூட்டுதலும், கடனாற்ற ஏவுதலும், இசை மேம்படு வழி இயம்புதலும் அன்னார் கடைப்பிடியாகக் கொண் டிருந்தன ஆகலின் என்க.

பொற்பு - பொலிவு, அழகு. முறி- தளிர். முறியிலை என்பது முறியாகிய இலை என்றும், முறியும் இலையும் என்றும் பொருளாம். கண்ணி - சூடும்பூ; ஆடவர் தலையில் சூடுவது.

“கண்ணி கார்நறும் கொன்றை: காமர்

வண்ண மார்பில் தாருங் கொன்றை

- புறம் - 1

என்பது பெருந்தேவனார் வாக்கு. தளிரும் இலையும் கொடியும் பூவும் மிடைந்து கண்ணியாகச் சூடப் பெறுதல் உண்டு என்பதை,

"மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து

செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி”

என்பதால் கொள்க.

- புறம். 76