உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

117

வீரரும் வேந்தரும் ஆடற்பயிற்சி மீக்கூர்ந்து அகன்ற மார்பும் திண்ணிய தோளும் படைத்து உருவெழுதிக் கொள்ளும் வண்ணம் திகழ்ந்தனர் ஆகலின் ‘முழவுத்தோள் மன்னர்” என்றார். அதியமானை,

66

“கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழவுமேம் பட்ட நற்போர்

என்று ஔவையார் குறித்தது நினைவு கூரற்குரியது.

முழவுத்தோள் என்னை’

புறம். 88

வேந்தர் அறிந்து பாராட்டும் விழுப்புகழை வீரர் அவா

வினர் என்பதை.

“தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாமவற்

கொற்கத் துதவினான் ஆகுமால்"

(19)

என்று முன்னர் இந்நூலுடையார் உரைத்தமையாலும்,

"பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க்

(22)

என்று மேலே உரைப்பதாலும் கொள்க. இதனால்,

குடம்பு கொடுத்தாரே மூத்தார்’

“மன்னர் அறியுநர் என்னும் செருக்கு

கற்சிலை போல நிற்பவர்க்கு அல்லால் எளியவோ?'

என்றார். செருக்கு - பெருமிதம். படைச் செருக்கு என்பதையும் உன்னுக.

போர் வெள்ளத்தையும், புனல் வெள்ளத்தையும் வெளிப் படுப்பான் தானை வெள்ளம் என்றார்; அவ் வெள்ளம் நீந்து தலினும் அருமைப்பாட்டைக் காட்ட ‘வேல் தானை வெள்ளம்’ என்றார். என்ற அளவே போதுமாக ‘நெரிதர” என மிகுதியும் மேலே மேலே வர. ஆற்றலும் வெளிப்படுத்தார். நெரிதர (குறிஞ்சிப். 132)

-

வேல் தானை வெள்ளம் என்பதற்கு ஏற்ப ஆற்றுக் கடும் புனல் வெள்ளம் என்றார். உவமையடையும் பொருளடையும் ஒப்ப நிறுத்தும் உயர்பு பற்றி. பொருதல் ஒப்பு ஆகலின்.

கற்சிறை என்பது கல்லால் கட்டப்பெற்ற அணை. கடுகி வரும் நீரைக் கல்லணை தாங்கினாற் போலப் பெருகிவரும் படையைத் தடுத்து நிறுத்துவான் ‘கற்சிறை’ எனக் காரணக்