உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

119

ள்) மிகத் தண்ணிய மாலையணிந்த மன்னர்க்காகத் தம் உடலை உவப்போடு வழங்கியவர் மிக இளமையுடையரே எனினும் முதியவரேயாவர்; தம்மைப் புரந்த தலைவற்கு உதவியாம் பொழுதில் தம் உயிரைத் தராதவர் அகவையால் முதியரே ஆயினும் இளையவரே ஆவர் என்றவாறு.

இ-து :- அகவையைப் பொறுத்தது அன்று இளையர் முதியர் என்பன; நாட்டுக்காக அவர் செய்யும் செயலைப் பொறுத்தவை அவை என்பது.

(வி-ரை) பிறந்த பொழுதேயும் என்றார் மிக இளமை என்றற்கு. ‘முற்றுழிக் கண்ணும் இளையரே' என்பதை நோக்கப் போதரும்.

இளமையிலே அருஞ்செயல் ஆற்றல் வருமோ எனின் அவரை அன்றோ சிறுப்பெரியார்' என்றும், 'சிறுமுதுக் குறைவி’ என்றும் அழைத்தனர்.

ஒன்றற்கு ஒன்று மறுதலைப்பட்ட தன்மையை உலகு விரும்பிப் பாராட்டுதல் கண்கூடு. இளமையில் மூதறிவும், முதுமையில் குழந்தையுள்ளமும் வாய்ப்பதை வியக்கின்றோம் அல்லமோ?

"இளையர் முதியர் எனவிருபால் பற்றி

விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தான் உளன்

என்று வீடுமனை வியந்து பாராட்டுகின்றது பெரும்பொருள் விளக்கம். (புறத்திரட்டு. 542).

அன்றியும்,

“குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார்”

தமிழ்த் தொல் குடியினர் என்பதும்,

“செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

புறம். 74

செருமுகம் நோக்கிச் செல்கென”

விடுத்ததும் (279),