உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அத் தலைவன் பகலில் எறி என்றானோ? இல்லை. “இரவே எறி” என்றான். அதன் பொருள் என்னை? ‘பகல் எறியேன்’ என்பதன்றோ! ஆகலின் குறிப்பால் ஐயுறுதல் கூடத் தன் ஆண்மைக்கு இழுக்காமெனக் ழுக்காமெனக் கொண்டு கொதிப் புற்றுக் கூறினான்.

வீரரை நோக்கிப் பொதுவிற் கூறிய உரையெனினும் பொறுக்க ஒண்ணாதது ஆக அத்துணைப்போர்க்கும் இடையே அச்சம் என்னும் ஒரு பொருள் உண்மையையே அறியாத என்னை நோக்கிக் கூறினை என்பானாக நொந்து,

"இரவே எறிஎன்றாய் என்னை

என்றான்.

'விரை விரைந்து' என்றது கடுகடுத்து,' 'நடுநடுங்கி' என்பது போன்றதோர் இரட்டைச் சொல், ‘கலங்கி’ என்னும் பொருட்டு. துணிந்து ஏவ மாட்டாமையால் விதிர்விதிர்ப்புற்று இரவே எறி என்றது கண்டு 'விரைவிரைந்து' என்று உண்ணகைத் துரைத்தான்.

'உள்ளம் எள்ளிய மடவோனை' என் செய்வது; அவன் தலைவன் ஆயினனே; ஆகலின் 'வேந்தன் ஆயினாய்' என்றான். நீ வேந்தனாக மட்டும் இராமல் இவ்வாணையை இட்டிருந்தால் என்பானாய் ‘அன்றி' என்றான்.

நீ

வேந்தன் அல்லாதவனாக நீ இருந்தால் ‘புகுவதோ?' எனத் தன் உந்தும் உணர்வையெல்லாம் ஒருங்கு கூட்டி வினாவினான். எது புகுவதோ?' என ஐயுறவைத்து அறைந்தான்; “வெளிப் பட்டு என்னை இரவே எறி என்று ஏவிய நா” என்று முடித்தான்.

போந்து - வெளிப்போந்து. 'போந்து என்னைச் சொல்லிய நா புகுவதோ' என இயைக்க. புகுவதோ என்பதால் ‘புகாமை', அறுக்கப்பட்டிருக்கும் என்பதாம். அறுக்கப் படாமைக்கு ஏது, 'வேந்தன் நீ ஆயினாய்' என்பது மட்டும் அன்று; விரை விரைந்து' (நடுங்கி) உரைத்தனை ஆகலின்; அந்நாவை அறுத்த லும் என் ஆண்மைக்கு இழுக்காம் என விடுத்தனன் கண்டாய் என்றான் என்க.

ய்

வெகுளிச் சுவையின் நிலைக்களம் நான்கனுள் குடிகோள் பற்றி வந்த வெகுளி இது, தன் மறக்குடிக்குத் தகவில்லாக் கட்டளையாகலின். அவ் வெகுளி மற்றொரு நிலைக்களமாம் உறுப்பறை' செய்ய ஏவியது.