உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

123

“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே”

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (மெய்ப். 10).

“உறுப்பறை என்பது கைகுறைத்தலும், கண் குறைத்தலும் முதலாயின. குடிகோள் என்பது தாரமும் சுற்றமும் குடிப் பிறப்பும் முதலாயினவற்றுக்கட் கேடு சூழ்தல்” என்றார் பேராசிரியர்.

தண்டிக்கக் கருதுவார் கை குறைத்தல், கண்குறைத்தல் என்பதுடன் கால் குறைத்தல், தலை குறைத்தல், காது குறைத்தல், மூக்குக் குறைத்தல், நாக் குறைத்தல் என்பனவும் உண்டு என்பதை இலக்கிய வழக்கிலும், உலகியல் வழக்காம் நிகழ்ச்சிகளிலும் காணக் கூடியவே.

66

“ஆக்கரிய மூக்குங்கை அரியுண்டாள் என்றாரை

நாக்கரியுந் தயமுகனார் நாகரிகர் அல்லாமை மூக்கரிந்து நுங்குலத்தை முதலரிந்தீ ரினியுமக்கும்

போக்கரிதிவ் வழகையெல்லாம் புல்லிடையில் உகுத்தீரே”

(23)

ஆரணிய. 349.

என்னும் கம்பன் கவியைக் கருதுக.

24.

13 . படைச் செருக்கு -7

.

நேரிசை வெண்பா

வான்வணக்கி அன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையில் எஃகமால் - தானும் விலங்கால் ஒருகைத்தால் வெல்கை நன்றென்னும்! நலங்காணேன் நாணுத் தரும்.

-புறத். 1320.

இ -ள்) வானத்தை வளைத்தற்கு எடுத்தாற் போன்ற வலிமையமைந்த நீண்ட பெரிய கையையுடைய இவ் யானைக்கு தோ, என் கையில் உள்ள வேல் தகும். ஆனால், இவ் யானை தானும் ஒரு விலங்கே; ஒரோ ஒரு கையை உடையதே; ஆகலின்

தனை வெல்லுதலால் நன்று என்னும் பெருமை எய்தேன்; மாறாக எனக்கு இழிவே தரும்; என்றவாறு: