உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் 12

இ-து :- ஒரு கையுடைய யானையை வெல்லுதல் மாந்தர்க்கு வெற்றிப் பெருமை ஆகாது என்பது.

ருகை

(வி-ரை) தறிகெட்டு வெறிகொண்டு தன்னைத் தாக்கு வதற்காகக் கைநிமிர்த்திவரும் களிற்றை நோக்கிய வீரன் ஒருவன் தன் பீடும் பெருமிதமும் தோன்ற வீரரிடையே உரைத்த உரை இஃதாகும்! வெற்றிவேற்கையனாகிய இவன் இதோ வீழ்த்தி விடுவான் என உடன் வீரர் எதிர்நோக்கியிருக்க, வ்வுரையால் பேராண்மைக்கும் பேராண்மை உண்மையைக்

காட்டி வியப்பித்தான்.

6

வணக்குதல் - வளைத்தல்.

6

“வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி’

என்றார் நற்றிணையிலும்.

(285)

களிற்றின் கை எழுச்சியையும் ஆற்றலையும் உயர்வு நவிற்சியால், “வான்வணக்கி அன்ன” என்றார். “வானத்தை வில்லாக வளைப்பான் மணலைக் கயிறாகத் திரிப்பான்” என்னும் வழங்கு மொழியையும்.

“செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்

வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்

வேண்டியது விளைக்கும் ஆற்றலை

என்றதையும் எண்ணுக.

புறம். 38.

யானையின் கைவன்மை காட்டுதற்கு 'வலிதரு நீள் தடக்கை என்றார்; வலிமையும் நெடுமையும் பருமையும் காட்டிய அடை மொழிகள். 'வலிகெழு தடக்கை' என்றும் (மதுரை. 720; பதிற். 90) ‘வலிதுஞ்சு தடக்கை' என்றும் (புறம் 54, 394) பிறர் கூறினாராக, இவர் நெடுமையையும் இயைத்துக் கொண்டார் 'வான்வணக்கி அன்ன' நிமிர்ந்து வருதலின்.

எஃகம் - வேல். வேலுக்குக் கூர்மை நெடுமை திண்மை அடை இன்றாயினும் ‘என்கை எஃகம்' என்றதே சாலும் என அமைந்தான், வலிதரு நீள்தடவேல் ஒன்றுமே தன்கைக் கொள்ளப் பெறும் ஆகலின்.

யானைக் கையை நோக்கியவன் பின் தன் கையை நோக்கி, அதன்பின் தன் கைவேலை நோக்கினான் ஆகலின் 'ஈது’ என்கை எஃகமால் என்றான். இது என்னும் சுட்டு நீண்டது.