உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம்

8

13. படைச் செருக்கு - 8

நேரிசை வெண்பா

-

காலாளாய்க் காலாள் எறியான் களிற்றெருத்தின்

25.

மேலாள் எறியான் மிகநாணக்

தருக்கினனே சான்றோர் மகன்.

காளை

கருத்தினதே என்று களிறுஎறியான்; அம்ம

12

புறத். 1421

இ-ள்) வீரன் மகனாம் வ்வீரன் தன்னொடும் ஒத்த காலாளாகக் கருதிக் காலாள் வீரனை வெட்டி வீழ்த்தான்; மிக நாணங்கொள்வனே என்னும் பரிவால் களிற்றின் பிடர்மேல் இருக்கும் வீரனை வெட்டி வீழ்த்தான்; காளைபோலும் வீரனது கட்டளையையே தன் செயலாகக் கொண்டதே களிறு என்று அதனையும் வெட்டி வீழ்த்தான். அம்ம! இவன் மிகப் பெருமிதம் உடையனே காண்! என்றவாறு.

இ-து - சொல்லளவால் கூடத் தன் பேராண்மைக்குக் குறைவருதல் கூடாது என்று மூதின் மாந்தர் கருதுவர் என்பது.

(வி-ரை) காலாளையும், களிற்றின் மேலாளையும், களிற்றையும் வெட்டி வீழ்த்தாது விலகிச்சென்ற வீரனை வினாவினாற்கு அவன் உரைத்ததையும் நிகழ்த்தியதையும் அறிந்தான் ஒருவீரன், அப் பெருமிதம் தோன்றப் பிறர்க்கு உரைத்தது இது.

வாழையடி வாழையெனச் சான்றோர் வழிவந்தவன் ஆகலின் 'சான்றோர் மகன்' என்றார். சான்றோர் - வீரர். அறிவாலும் பண்பாலும் நிறைந்தாரும், மறமாண்புடையாரும் சான்றோர் எனினும் இவண் மறமாண்பினையுடையாரையே சான்றோர் என்ற தென்க.

"சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”

என்பதும்,

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்பதும், அவ்வாறே,

புறம். 312

- திருக். 69