உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே”

என்றும்,

"சிதைந்து வேறாகிய,

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனனே'

127

புறம். 277

புறம். 278

என்றும் வருவனவும் சான்றோர் என்பது மறக்குடியினராதலை

விளக்கிப் போதரும்.

வீரர் வழிவழியே வந்து மாண்புறுதலை,

"இவற்கீத் துண்மதி கள்ளே; சினப்போர் இனக்களிற் றியானை இயல்தேர்க் குருசில் நுந்தை தந்தைக் கிவன்தந்தை தந்தை எடுத்தெறி ஞாட்பின் இமையான் தச்சன் அடுத்தெறி குறட்டின் நின்றுமாய்ந் தனனே; மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் உறைப்புழி ஓலை போல

மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே

புறம். 290.

எனவரும் அருமைத் திருப்பாட்டு இயம்புதலை இனிதுணர்க.

.

காலாளை எறியாமைக்குக் காரணம் காட்டுவானாய்க் “காலாளாய்க் காலாள் எறியான்” என்றான். தன்னை ஒத் தானொடு பொருவதே போர் ஆயினும், ஒப்பானவனை வெல்லுதலால் உளதாம் பெருமை ஒன்று வீரற்கு உண்டோ என்று கருதினவனாய். இதனைக் கூறினான். அவனும் காலாள். தானும் காலாள்; ஒரு காலாள் மற்றொரு காலாளை வெல்லு தலால் காணும் பெருமை யாது என்னும் துணிவால் உரைத்தான் என்க. அன்றியும் தன்னொடு ஒப்பப் போரிடத்தக்க முழுஆள் ஆகக் கருத மாட்டாமல், ‘கால் ஆள்' ஆகக் கருதினான் ஆகலின் எறியான் என்றுமாம்.

இனிக் களிற்றெருத்தின் மேலாளை ஏன் எறிந்திலன் என்பதைக் காட்டுவானாய் 'மிகநாண' என்றான். தான் காலாளாக இருந்து கொண்டு, களிற்றின்மேல் இருப்பானை வெட்டி வீழ்த்தினால் அவனுக்கு எத்தகைய இழிவு உண்டாம்? அவ் விழிவுக்கு - நாணுதலுக்கு அவனை இடமாக்கிக் கொள்ளும் -