உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம்

12

வெற்றியைச் சான்றோர் மதியார்; ஆகலின், “மிகநாணக் களிற்றெருத்தின் மேலாள் எறியான்” என்றான்.

இனி யானையையேனும் வீழ்த்தலாமே எனின், அவ்யானை தன் கருத்தின்படி என்னைத் தாக்க வருகின்றதோ எனின் இன்று; அவ் யானை எருத்தின்மேல் இருந்து ஏவுவான் கருத்தின் படியே என்மேல் வருகின்றது; ஆகலின் ‘ஏவுவானை விடுத்து அம்பை நோவதுபோல' இவனை விடுத்து இக் களிற்றை எறிதல் பொருந்தாது என்பானாகக்,

66

காளை, கருத்தினதே என்று களிறு எறியான்

க்

என்றான். இவை ஒன்றின் ஒன்று உயர்ந்த வீறுகோள் ஆகும். சான்றோர் மகனாம் சான்றோன் ஆகிய இவனுக்கு அன்றிப் பிறர்க்கு இஃது இயையாமையின் ‘படைச் செருக்கு' ஆயிற்று என்க.

அம்ம : வியப்புப் பொருள் தரும் ஓர் இடை டைச் ச் சொல். இதோ ஒரு வியப்பைக் கேளுங்கள் என்றுமாம். ‘அம்ம கேட்பிக்கும்' என்றாராகலின் தொல். இடை.

28.

களிற்றை எறியாமையை முன்னைப் பாட்டுடன் (25) பொருத்திக் கண்டு கொள்க.

14. எயில் காத்தல் - 1

பகைவர் மதிலை முற்றுகை இட்ட காலத்து, அம்மதிலுக்கு உரியவர் மதில் சிதையாவாறும், அதனுள் பகைவர் புகாவாறும் காத்தல் எயில் காத்தலாம். எயில் - மதில். மதிலைக் காப்பவர் நொச்சிப்பூச் சூடுவராகலின் இது நொச்சி எனப்பெறும்.

“நொச்சி மதில் காத்தல்"

நேரிசை யாசிரியப்பா

26.

பல்சான் றீரே பல்சான் றீரே

வீழ்ந்த புரிசை சேர்ந்த ஞாயில்

கணையில் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின்

மல்லல் மூதூர்ப் பல்சான் றீரே;

பலநாள் வருந்தி இளையரும் முதியரும்

நன்னுதல் மகளிரும் இன்னுங்கண் டுவப்ப,