உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

யாமங் கொள்பரும் ஒழிய, மேனாள் கொல்படை மொய்த்த குன்றுயிர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக் கருங்குரல் நொச்சி மிலைந்த

திருந்துவேல் விடலை, காப்பமைந் தனனே.

129

-புறத். 1342.

இ ள்) பல அமைந்த குணங்களை யுடையீர், பல அமைந்த குணங்களை யுடையீர், பகைவரால் வீழ்ந்துபட்ட மதிலைச் சேர்ந்த ஞாயிலையும், கணையால் மேடுபட்டுக் கன்று மேய் விட மாகிய அகழையும் உடைய வளமான பழைய ஊரின் பல அமைந்த குணங்களை யுடையீர், பலநாட்களாக வருந்தி இளையவரும் முதியவரும் நல்ல நெற்றியையுடைய மகளிரும் இப்பொழுதும் கண்டு மகிழுமாறு யாமக்காவல் புரிவாரும் அக்காவல் ஒழிய, முன்னாள் போரில், கொல்லும் படைக் கலன்கள் மொய்த்தலால் அமைந்த குன்றமென்ன உயர்ந்த புகழ்வாய்ந்த போர்ப்புண்ணை, நெய்

க்

தோய்க்கப்பெற்ற

பஞ்சினால் புதைத்து மூடி, மெல்லெனக் கரிய கொத்துகளையுடைய நொச்சிமாலையை அணிந்த செவ்விய வேற்படையைக் கொண்ட காளை, காவல் கட காவல் கடன் நீங்கானாக அமைந்தனன் என்றவாறு.

-

-

து: விடலை காப்பு அமைந்தான்; அதனால் அஞ்சு தக்கதொன்றும் இன்று என்று அவன் காவன் மாண்பு உரைத்தது.

(வி-ரை) சால்பு, அமைந்த குணங்களை யுடைமை. பல அமைந்த குணங்களை யுடையராகலின் “பல்சான்றீர்’ என்றார். சான்றோர்க்கமைந்த அருங்குணங்கள் அளவிறந்தன ஆயினும், ‘அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை" என்னும் ஐந்தனையும் சிறப்பாகக் குறிப்பார்; இவற்றுள் ஏனைய பலவும் இயைந்து நடக்குமாகலின்.

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் பூன்றிய தூண்”

என்பது வள்ளுவம்.

“பல்சான் றீரே! பல்சான்றீரே

-திருக்.983

என்பது விளியடுக்கு. புறத்தினும் இவ்வாறு கூறினார் (195, 246,

301)