உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம்

L

12

புரிசையாவது மதில். புரியாவது நகர்; அதனைச் சூழ்ந்த மதில் புரிசை ஆயிற்று. ஞாயில் என்பது சூட்டு. அஃது அம்பு எய்து மறைந்து கோடற்கு வாய்ப்பாக மதிற்கண் செய்து வைக்கப் பெற்ற ஓர் உறுப்பு. ஏப்புழை என்பது அம்பு செலுத்தும் துளை; அம்பைச் செலுத்தி மறைந்துகொள்ளும் உறுப்பு சூட்டு. தனை ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையும் சூட்டென்பார் நச்சினார்க்கினியர். (சீவ. 105 குருவித்தலை என்பார் அடியார்க்கு நல்லார்.(சிலப். 15:217) நல்லார். (சிலப். 15: 217) அவரே, “இதனை ஏவறை என்பாரும் உளர்' என்பார். புரிசையொடு ஞாயில் பொருந்தியமையும் கிடங்கு சூழ்ந்தமையும்,

66

கடிமிளைக் குண்டு கிடங்கின்

நெடுமதில் நிரைஞாயில்

அம்புடை ஆரெயில்"

என்றும்,

“உயர்ந்தோங்கிய நிரைப்புதவின்

நெடுமதில் நிரைஞாயில்

– பதிற் 20

அம்புமிழ் அயிலருப்பத்து

மதுரைக். 65 -7

என்றும் வரூஉம் சங்கச் சான்றோர் வாக்குகளால் அறியலாம். ஞாயில் எண்ணற்றிருந்தன என்பதை ‘நிரைஞாயில்' என இம் மேற்கோள் பாக்கள் சுட்டுதலானும்,

66

வான்தோய் வன்ன புரிசை விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில்'

وو

எனக் கானப்பேரெயில் கூறப்பெறுதலானும் கொள்க.

புறம். 21

கணைகள் மாரியெனப் பொழிந்து தாக்குதலால் மதில் சிதைந்து வீழ்ந்துபட்டுக் கிடங்கு (அகழ்) தூர்ந்துபட்டது. அதன்கண் புன்முளைத்துக் கன்று மேய்வனவாயின. ஆகலின், கணையிற் றூர்ந்த கன்றுமேய் கிடங்கு” என்றார்.

66

இத்துணை அழிபாடுகட்கிடையேயும் தன் வீறும் வளமை யும் குன்றாது நின்று சிறத்தலின் “மல்லல் மூதூர்!' என்றார். இஃது எள்ளலாக அமையும் எனின், பல்சான்றோரை விளித்துக் கூறியமையானும், திருந்துவேல் விடலை காப்பின் மீப்புகழ் கூறலானும் வீறு வெளிப்படக் கூறலன்றி எள்ளலன்றாம்.

‘கண்டுவப்ப என்பதை இளையரும், முதியரும், மகளிரும் என்பாரொடும் கூட்டுக.