உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

131

இளையர் இவண் இளைஞராய புதல்வரைக் குறித்தது. என்னெனின், பொருகளம் சேறற்கியலா முதியருடனும், மகளிருடனும் இணைத்துக் கூறினார் ஆகலின். மற்று ‘யான்' கண்டனையர் என் இளையரும்' என்பார் போன்றவர் எனின், அவரும் பொருகளம் சேறற்கு முந்துவர் எனவும், “வானரைக் கூந்தல் முதியோள் சிறுவனும்” (புறம். 277) “முளரி மருங்கின் (புறம்.277) முதியோள் சிறுவனும்” (புறம். 278) படையழித்துப் பாழி கொண்ட பெருமைக்குரிய எனவும், தெளிந்து "வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇச் செருமுகம் நோக்கிச் செல்க” என விடுக்கத்தக்க (புறம். 279) நிலையும் வாராக் குறியிறைப் புதல்வர் (குறுந். 394) இவர் என்க.

யாமங் கொள்பவராவார் யாமங்காவலர். அவர் இராக் காவற்கு நெருக்கமாக விளக்குகளை நெடுகிலும் நாட்டுவர் என்றும் (அகம். 114) யாமந்தோறும் பறையறைவர் என்றும் (குறுந். 375) வாயில்களைக் காவல் ஓம்புக என்று மணி நா ஓங்கி அசைப்பர் என்றும் (நற். 132) விளக்கினைக் கைக்கண் காண்டு சுற்றிவருவர் என்றும் (புறம். 37) சான்றோர் கூறுவர். கண்ணுறங்காக் கடப்பாடு மேற்கொண்ட அவ் யாமங்காவலரும்,

று

விட லை காப்பமைந்த சீர்மை யறிந்து தம் காவற்கடைக்கு ஊ இன்று என்னும் துணிவால் கடனோய்ந்தனர் என்பாராய். "யாமங் கொள்பரும் ஒழிய" என்றார்.

படையின் ஊற்றமும், ஏவியோன் ஆற்றலும் ஒருங்குணரு மாறு 'கொல்படை' என்றார். திண்ணம் அழிந்து பாடுறுத்தும் என்னும் தெளிவுடைமையால். அப்படைக்கும் அழியா அட லாண்மை யுடையான் விட லை என அவன் 'வீறுகோள்' விளம்பினார். கொல்படையும் ஒன்று இரண்டு என விரல்விட்டு எண்ணுமாறு இல்லாமல் ஒருபொழுதில் எண்ணற்றுத்தைத்தன ஆகலின் ‘மொய்த்த' என்றார்.

விழுப்புண் ஆவது விழுப்பத்திற்கு இடமாய புண், விழுப்ப மாவது அழிந்துபடாப் புகழ். அதன் பெருமையை எல்லை யிட்டுக் காட்டுவாராய்க் “குன்றுயர் விழுப்புண்” என்றார், மாணப் பெருமைக்கு மலையை உவமைப்படுத்துவராகலானும், மலைமேல் இட்ட விளக்கென நாடறிந்த பெருமையது ஆகலானும்!

புண்ணை ஆற்றுதற்கு மருந்துநெய் தோய்த்த பஞ்சை மெல்லெனச் சேர்த்திக் கட்டுதல் உண்மையின், “நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையென" என்றார். இதன் விளக்கத்தையும்