உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம்

12

மேற்கோளையும் இத் தகடூர் யாத்திரைப் பதினைந்தாம் பாடல் உரைக்கண் கண்டு கொள்க.

கருங்குரல் நொச்சி, கரிய கொத்துக்களையுடைய நொச்சி, யாறு, கால் முதலிய நீர்வளப் பகுதிகளில் செழிப்புற வளரும் ஆகலின்,

“நீர் அற வறியா நிலமுதற் கலந்த கருங்குரல் நொச்சி”

என்றார் புறத்தினும்; (271) எயில் காப்பார் சூடும் பூ அஃது ஆகலின் 'நொச்சி மிலைந்த' என்றார். விடலை, காளைப் பருவத்தினன். விடலை ‘படைமடம் படாப் பண்பினன் ஆகலின் அவன் வேலைத் ‘திருந்துவேல்' என்றார். படைமடம் படாமை யாவது போர் நெறி தவறாது பொருதல் என்க. இதனை,

66

"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை

99

என்னும் புறப்பாடலாலும் (9),

"படைமடம்' என்றது வீரர் அல்லாதார் மேலும், முது கிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார் மேலும் செல்லுதல்” என்னும் புறநானூற்றுப் பழைய உரையாலும் (142) அறிக.

"பல்சான்றீரே விடலை இன்னுங் கண்டு உவப்ப, ஒழிய, காப்பமைந்தனன்” என்று இயைக்க.

யாப்பமைதி

"பல்சான் றீரே பல்சான் றீரே" என ஓரடிக்கண் இருகால் அடுக்கி விளித்தலும், மீண்டும் விளக்கியுரைத்து அவரை விளித்தலும் ஒருவகை யாப்புறவாகும்.

“பல்சான் றீரே பல்சான் றீரே

கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுள்

பயனில் மூப்பின் பல்சான் றீரே”

என்றும்,

(195)