உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

15. தானைமறம் - 1

137

தானையாவது படை; படை வீரர்தம் ஆண்மைச் செயலைக் கூறுவது தானைமறம் ஆகும்.

பொரஎதிர்ந்த இருவகைப் படைகளும் பொருது ஒருங்கே மடியாமை விலக்கிய உயர்வையும், நிலங்காவல்கொண்ட வேந்தற்கு உறுதிகூறும் தன்மையையும், பகைவர் அழிவு பாட்டுக்கு நொந்து உரைக்கும் இரங்குதலையும் இத் தானை மறம் கூறும் என்பார் புறப்பொருள் வெண்பாமாலையுடையார் (129-131). இவற்றுள் இறுதிப் பொருளை உறுதிப் பொ கூறுவது வரும் யாத்திரைப் பாட்டு.

பலவிகற்பப் பஃறொடை வெண்பா

28.

கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி ஏர்தரும் தோள்நோக்கித் - தார்ப்பின்னை நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேல்நோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும்.

ருளாகக்

புறத். 1370

இ-ள்) கறுத்து விளங்கும் இளந்தாடியினனும், இடுக்கணுக்கு அஞ்சாதவனும் ஆகிய வீரன் தன் மாலையைத் தழுவி அழகு தரும் தோள்களை நோக்கி, தூசிப்படைக்குப் பின்னே களத்துள் நிற்கும் யானைத்திரளை நோக்கி, யானைத்திரளின் பின்னே நிற்கும் தேர்த்திரளை நோக்கி அதன்மேல் தான் இவர்ந்துள்ள தன் குதிரையினை நோக்கி, தன்மேல் படவரும் கூர்மையான கணையை நோக்கி, தன் கையகத்து ஒளிரும் வேலைநோக்கி, இறுதியாகக் கிணைப்பறை கொட்டுவானை நோக்கி நகை செய்வான் என்றவாறு.

2-51

-து :- அஞ்சாத வீரன், ‘பகையை அழித்துக் கொள்ளை கொண்ட பொருளைக் கிணைப் பறை கொட்டுவோனுக்கு வழங்குவேன்' என மகிழ்வான் என்பது.

(வி-ரை) காளை, நோக்கி, நோக்கி, நோக்கி, நோக்கி, நோக்கி, நோக்கி நகும் என இயைக்க.

தோளாண்மையே வேலாண்மை, வாளாண்மை முதலிய வற்றுக்கு உறையுள் ஆகலின் முதற்கண் தோள் நோக்கினான்.