உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம்

12

தன்னை எதிர்த்து நிற்பார் யானைப்படை வீரரும், தேர்ப்படை வீரரும் ஆகலின் அவரை நோக்கிய அவ்வளவில் தான் ஏறி யிருந்த அடல்மிக்க குதிரையை நோக்கினான். மெய்ம்மறை துளைக்க மாட்டாமல் பகைவரால் ஏவப்பட்டு அழியும் கணையை நோக்கியவன், தான் ஏவும் வேலுக்கு எவனும் தப்பான் என்னும் துணிவால் அதனை நோக்கினான். இறுதிக்கண் கிணைவனை நோக்கினான், இன்று இக் களத்தில் நீ பெற விருக்கும் கொண்டி (கொள்ளை) பெரிது என்பதைக் குறித்

தானாக.

பொருகளம்

சேருமுன்னரே இவற்கு இன்னது தருவேன் என்று கூறி அவ்வாறே களத்திடை வென்று தரும் வழக்குண்மையால் கிணைவனுக்கு தரக்குறித்தது தருவன் என்பது நேர நகைத்தான் என்க. இதனை மேல்,

66

கடிகமழ் உவகைக் கைவல் காட்சியெம்

துடியவற் கவனரை அறுவை ஈந்தனனே'

என வருவதால் (36) தெளிக.

அணல் - தாடி; தாடி என்பதனை,

“இரலை மருப்பில் திரிந்து மறிந்து வீழ்தாடி”

எனக் கலித்தொகை (15) கூறுவதால் மீசையைக் குறிக்கும் என்பதை உணரலாம். அதன் கருமையையும் இளந்தன்மையையும் பிறரும் ‘மையணல்' ‘புல்லணல்' என்று விளக்கினார். (புறம். 83, 258, 310).

நாட்பு - போர்க்களம். ஞாட்பு என்பதும் அது. ஞாட்பு என்னும் சொல்லைக் களவழி நாற்பது பயில வழங்கும் (2, 11, 17, 28, 34, 39) ‘ஞயம்' 'நயம்' என்றும் ஞமலி நமலி என்றும் ஞமன் நமன் என்றும் திரிந்து வழங்கினாற்போல ‘ஞாட்பு' ‘நாட்பு’ ஆயிற்று என்க. இத்திரிபும் தொன்மையது என்பதை,

66

விழுமியோர் துவன்றிய அகன்கண் நாட்பின்'

என்னும் பதிற்றுப் பத்தால் (45) உணரலாம். முதற்கண் வந்த தார் மாலையையும், பின்னைவந்த தார் தூசிப்படை (முற்படை) யையும் குறிக்கும். தார் - மார்பில் அணிந்த மாலை. கண்ணி - தலையிற் சூடும் பூ.