உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

139

“கண்ணி கார் நறும் கொன்றை காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை” என்னும் பாரதம் பாடிய பெருந்தேவனார் வாக்கான் (புறம். கடவுள் வாழ்த்து) இதனை அறிக.

முன்னோனைக் கொன்றவனைப் பின்னோன் தான் கொல்லச் சூள் கொண்டு வருதலை, “நெருநை, எம்முற் றப்பியோன் தம்பியோ டொராங்கு, நாளைச் செய்குவன் அமரெனக் கூறிப் புன்வயி றருத்தலும் செல்லான் பன்மான் கடவும் என்ப பெரிதே” என்னும் அரிசில்கிழார் பாட்டால் அறியலாம் (புறம். 304)

இஃது ஒரு வீரன் செயல் மாண்பைக் கண்டோர் வியந்து ரைத்ததாகும். நகைவகை நான்கனுள் இஃது எள்ளல் நகையாம்.

66

-

மேற்கோள்: இத் தகடூர் யாத்திரையை “வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை” என்பதற்கு (தொல். புறத். *8) மேற்கோள் காட்டுகிறார் நச்சினார்க்கினியர். அன்றியும் இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது” என்னும் அரிய குறிப்பு ஒன்றையும் பொறித்துள்ளர். அதனால் இப் பாட்டை அருளியவர் பொன்முடியார் என்பது போதரும். 'ஆங்கவனைக் கண்டு' என்பதில் விளக்கம் இன்று எனினும், ‘பொருளின்று உய்த்த பேராண்பக்கம்' என்னும் இதற்கு முற்படி வந்த துறைக்கு ‘மெய்ம்மலி மனத்தின்’ என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை மேற்கோள் காட்டி, 'இஃது அதியமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது” என்று எழுதியிருப்பதால் “ஆங்கு அவன்' என்னும் சுட்டு சேரமானைக் குறிக்கும் என்பது போதரும். இச் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்க.

66

15. தானை மறம் - 2 நேரிசை ஆசிரியப்பா

'இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மறவிர்

கண்ணிமைப் பளவில் கணைசெல் கடுவிசைப்

பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி

66

(28)

எல்லிடைப் படர்தந் தோனே; கல்லென

வேந்தூர் யானைக் கல்லது

ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே.

புறத். 1371