உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம்

12

இ ள்) புகழ் நிரம்பிய வீரர்களே, எள்ளுதலை ஒழிமின் ; கண்ணை இமைக்கும் பொழுதுக்குள் ஏவிய கணை கடிது செல்லுமாப் போலப் பண்ணுதல் அமைந்த குதிரையின் சிறந்த போர்த் தன்மையைப் புகழ்ந்து இரவுப் பொழுதின்கண் இவண் வந்தோன் ஆரவாரம் மிகத் தன் விளங்கிய இலைவடிவ வேலை வேந்தன் ஏறி இவர்ந்து வரும் யானையின் மேலே அல்லாமல் பிற யானைகள் மேல் ஏவுதற்கு ஏந்தான் போலும் என்றவாறு.

து :- மறவிர், படர்தந்தோன் வேந்தன் ஊரும் யானை மேல் வேல் ஏவுதலையே குறிக் கொண்டான் என்பது.

(வி-ரை) இதுவும் மானவீரன் ஒருவனின் மாண்பினைக் கண்டோர் உரைத்ததேயாம். மறவிர், எல்லிடைப் படர் தந்தோன், வேல், வேந்தூர் யானைக்கு அல்லது, ஏந்துவன் போலான் என இயைக்க.

இவனால் என்ன செய்தற்கு இயலும் என்று மறவர்கள் இகழ்ந்தனர் ஆகலின் ‘இகழ்தலை ஓம்புமின்' என்றான். நீங்கள் புகழ்மீக் கூர்ந்தவர்களே ஆயினும் கூட, ஒருவன் உண்மை ஆ யாற்றலை உணராமல் உரைப்பது தகவன்றாம் என உட் கொண்டு, மறவர்க்குப் ‘புகழ்சால்' என அடைமொழி வழங் கினான். ஔவையார்,

"போற்றுமின் மறவிர் சாற்றுது நும்மை ஊர்க்குறு மக்கள் ஆடக் கலங்கும் தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத் தன்ன என்னை நுண்பல் கருமம் நினையா(து)

இளையனென் றிகழிற் பெறலரி தாமே"

என்று அதியமான் ஆற்றலை உணரார்முன் உணர உரைத்தமை இவண் நோக்கத் தக்கதாம்.

66

கண்ணை இமைத்து மூடுமுன் குறியிற்றைக்கும் அம்பு போல விரையும் குதிரை ஆகலின், கண்ணிமைப் பளவில் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவி” என்றான். பண்ணமை என்றது பண்ணுதல் அமைந்த என்பது. அஃதாவது பக்கரை (சுவடு) கலணை (பருமம்) கலினம் (வாய்க்கருவி) குசைக்கயிறு, சம்மட்டி, குஞ்சம் முதலியவற்றை அமைத்தல்.