உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 12

கொண்டு தீட்டுவது வீரர்தம் ஆண்மைச் செயல் ஆகலின் அவ்வாறு செய்தமையாற் போலும் இலங்குவதாயிற்று என்க. ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்து'தலைப் புறப்பாட்டும் (284) "எஃகம், யானை மணி மருப்பிடையிட்டு விண்ணிடம் மள்ளர் கொள்ள மிறைக் கொளீ த் திருத்து”தலைச் சிந்தாமணியும் (284) செப்பும்.

ம்

குறிக்கோள் ஒன்று உடையன் ஆகலின் வேந்தூர் யானையை வீழ்த்துவதே நோக்காகச் செல்வான். பிறரும் அவர்தம் யானை, குதிரை பிறவும் அழிந்துபடச் செய்யான் என்று அவன் ஒரு நோக்கை உரைத்தான். யானையை வீழ்த்துதல் குறிப்பாகலின் அவ் யானைமேல் இவர்ந்த வேந்தனை வீழ்த்து தல் கூறாமலே அமையும்.

66

15. தானை மறம் 3

நேரிசை ஆசிரியப்பா

'அதிராது அற்றம் நோக்கு ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவின் இளையோன் இன்றுந்தன் குதிரை தோன்ற வந்துநின் றனனே; அவன்கை ஒண்படை இகழ்தல் ஓம்புமின்;

(29)

விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன்

கண்படை பெறாஅன் வைகினன்; இவன்கைத்

திண்கூர் எஃகம் திறந்த

புண்கூர் யானை நவில்குரல் கேட்டே.

புறத். 1372

இ-ள்) அதிர்ச்சி சிறிதும் இன்றி, வாய்த்த பொழுதினை நோக்கும் ஞாயிலின் உள்ளிடத்தே பாயும் ஞாயிற்று ஒளியெனச் சுடர்விட்டு விளங்கும் ஒளிமிக்க வேலொடு நெருநல் எதிரிட்ட வீரத்திருவினையுடைய இளைய வீரன், இன்றும் தன் குதிரை விளக்கமெய்த வந்து நின்றனன்; இவன் கையின் வலிய வேல் திறந்து மடைசெய்தலால் புண்கூர்ந்த யானை ஒழியாது அரற்றும் ஒலியினைக் கேட்டு, விழுமிய சிறப்பமைந்த விண்ணளாவும் நெடுங்குடையுடைய வேந்தனும் ய கண்ணிமை மூடானாக

ரவெல்லாம் உழன்றனன்; ஆகலின் இவன் கையின்கண் உள்ள ஒளிமிக்க வேற்படையின் இகழாது ஒழிமின் என்றவாறு.