உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

143

து:- “நெருநல் நம் யானையைப் புண்படுத்திய இளைய வீரன் இன்றும் வந்தனன்; இகழேற்க” என்று அவன் வீர மேம்பாடு சொல்லியது.

(வி-ரை) வேற்படை வீரன் ஒருவன் மேம்பாட்டைக் கண்டோர், தம் படையிடைக் கூறியது.

அற்றம் - பொழுது.

“விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு”

என்னும் வள்ளுவர் வாக்கும்.

66

'அற்றத்தில் வெல்வானாக

என்னும் சேக்கிழார் வாக்கும் இப் பொருட்டாதல் அறிக.

ஞாயில் என்பது எய்துமறையும் சூட்டு ஆகலின் அதிர் வின்றி அம்பு ஏவும் திறலர் என்பதை வெளிப்படுப்பான்,

66

66

"அதிராது சுற்றம் நோக்கு ஞாயில்'

என்றார். ஞாயிலுள்ளே பாயும் கதிர் ஒளியென விளங்கும் வேல் ஆகலின், 'ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல்' என்றார். ஒளியாலும் நெடுமையாலும் கதிர், வேலுக்கு ஒப்பாம். இல்நுழை கதிரின் துன்அணுப் புரைய” என்று கதிரொளி புகுதலைக் காட்டினார் மணிவாசகர். சுடரின் - இன்: ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள் உருபு. இன், உவமை உருபு எனினும் ஆம்.

'இன்றும்' எனவந்த உம்மையால் ‘நெருநலும் என வருவித்துக் கொள்ளப் பெற்றது. நெருநலும், குதிரை தோன்ற வெள்வேலுடன் வந்து நின்றன னாதலும் கொள்க.

வீரன் தொலைவின் கண்ணே வரும்பொழுதே சுட்டிக் காட்டினன் ஆகலின், 'அவன்' எனச் சேய்மைச் சுட்டால் குறித்தான். குறிக்கும் அளவையில் விரைந்து வந்து குறுகினன் ஆகலின் ‘இவன்' என்றான். இச்சுட்டு விகற்பம் விரைவு காட்ட வேண்டிற்றாம்.

அவன்கை ஒண்படை இகழ்தல் ஓம்புமின் என முற்பட, 'என்னை?” என எதிர்நோக்கும் நோக்கமைத்துப், பிற்படக் கரணியம் எடுத்துரைத்தான். சிற்றரவின் குருளையும் பரிய