உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம்

12

யானையை வருத்தும் கோளுடைத் தாயினாற்போல, வ்விளைய வீரன் 'விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாமையைச்' செய்தனன் என்றான். வேந்தன் விழுப்புண்பட்ட வீரரையும், விலங்கையும் எண்ணிக் கண்படை பெறாது உறைதலை,

'மின்னவிர், ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை

நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக்

களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்

ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து....

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

சிலரொடு திரிதரும் வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே"

என்னும் நெடுநல்வாடையான் அறிந்து கொள்க.

யானை புண்ணுற்றுக் குருதி ஒழுக்கிப் பெருகுதலையும், அக் குருதி நீர் மணிநிறக் கழிநீரின் நிறத்தைக் குங்குமக் கலவையாய் மாற்றுதலும்,

“செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப

அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல”

என்னும் பதிற்றுப் பத்தால் (11) விளக்கப் பெறும்.

யானை புண்ணுறு துன்பம் பொறுக்கலாற்றா நிலையாற் பல்கால் நைந்து பிளிறுதலின் 'நவில்குரல்' என்றார். நவிலல் - கூறியடிப்படல். “நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி” என்றார் மணிமேகலையினும் (13 : 24). இவண் அடிக்கடி அயாவுயிர்த் தாற்றுதலைக் கொள்க.

66

-

‘அதிரா தற்ற நோக்கு” மென்றமையால் தன் வீரர் மாண் பும், திருவின் இளையோன் என்றமையால் கண்டாரால் விரும்பப் படும் தோற்றப் பொலிவும் இளமை எழிலும் வீறுமேம்பாடும் உடையான் என எதிரிடுவோன் மாண்பும், "வேந்தன் கண்படை பெறாஅன்" என்றமையால் மறமீக்கூர்ந்த மன்னன் உள்ளத்தில் அறமீக்கூர்ந்த அருள் விளங்கும் ஏற்றமும் இன்ன பிறவும் குறித்தான்.