உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

145

இகழ்தல் - நகைத்து இகழ்தலாம் ; இளமை கரணிய மாக நகை பிறத்தல் கூடுமாகலின், 'திருவின் இளையோன்' எனச் சுட்டி நகை ஒழித்து இகழாமைப் படுத்தான், "இளையன் இவனென உளையக் கூறுதல்" வீரர்க் குண்மையாகலின் (புறம். 72)

15. தானை மறம் - 4

நேரிசை ஆசிரியப்பா

31. கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே; கையது வேலே; சுட்டி யதுவும் களிறே; ஒட்டிய தானை முழுதுடன் விடுத்துநம்

(30)

யானை காமினவன் பிறிதெறி யலனே.

புறத். 1373.

(இ-ள்) கரும் புள் போன்ற காரிக் குதிரையின் மேலே இவர்ந்த இவ்வீரன், காலில் கட்டியது கழல் ஒன்றுமேயாம்; கையில் எடுத்தது வேல் ஒன்றுமேயாம்; விரலால் சுட்டிக் காட்டியதும் வேந்தன் ஊரும் யானை ஒன்றுமேயாம்; ஆகலின் மறவீர், செறிந்துள்ள படையனைத்தையும் காத்தலை விடுத்து நம் வேந்தனூரும் யானை ஒன்றனையுமே காத்துக்கொள்ளுங்கள்; அவன் பிறிதொன்றையும் எறியான்.

இ-து:- “வீரன் யானையை அன்றிப் பிறிது எறியலன்; ஆகலின் அதனைக் காமின்" எனச் சொல்லியது.

(வி-ரை) எதிரிட்டு வரும் வீரன் ஒருவனைக் கண்டு தன் படைவீரர் அஞ்சிக் களமெல்லாம் அடர்த்து நின்றாராக அவரை நோக்கி ஒரு வீரன் உரைத்தது இது.

காரியாவது காரிக் குதிரை. கருநிறக் குதிரையும், காளையும் காரி எனப் பெறும்.

66

'காரிக் குதிரைக்காரி”

“காரி யூர்ந்து பேரமர்க் கடந்த

மாரி யீகை மறப்போர் மலையன்

சிறுபாண். 110

கரும்புள்ளொடு காரிக்குதிரை வண்ணத்திற்கும், விரைந்து தாக்கி வெல்லுதற்கும் உவமையாம். கரும் புள்ளாவது கரிக்குருவி. அது வலிய பருந்தினையும் தாக்கி வெல்லுதல் கண்கூடு