உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

147

(இ-ள்) அஞ்சத் தகையளே காண்; அஞ்சத் தகையனே காண்; கானத்தே பயற்றுக் கொடியைக் காப்பவர் இட்டுவைத்த பந்தர் போல அலந்துபோன தலையினையுடைய முதியவள் அஞ்சத் தகையளே காண்; எதிர்ந்த கொடும் போரிடையே என்செய்வேன்' என்று திகைத்திருந்த வேந்தற்கு ‘அஞ்சன்மின்' என்றுரைத்து முந்துநிற்கும் ஒப்பற்ற களிற்றை ஈன்றவளாகிய அவள்! என்றவாறு.

து:- “முதியள் வேந்தற்கு அஞ்சல் என்பதோர் களிறு ஈன்றனள்; அஞ்சுதக்கனள் அவள்” என்பது சொல்லியது.

(வி

-

ரை) ‘அஞ்சுதக்கனள்' என முதியோளைக் கூறியது அங்கதமாம்; வஞ்சப் புகழ்ச்சி என்பதும் அது; அஞ்சு தக்கனள் என்பதன் வழியே ‘அஞ்சல் என்பதோர் களிறீன்ற’ திருவயிற்று மாண்புரைத்து மூதிற்பெருமை வெளிப்படுத்தாராகலின்.

முதியாள் இக்கால் பிற்படு முதியளாதல் அன்றி களிறீன்ற காலையும் முற்படு முதியளாதல் கொள்க. என்னெனின், அவளுக்குத் தாம் நெடிது சென்று ஈன்ற ஒரு மகன்மேல் பேராக் காதல் பெருகிநிற்கும் ஆகலின். ஆயினும் மறக்குடி மாண்பால் வேல்கைக் கொடுத்து வென்று வருக என விடுப்பள் ஆதல் தமிழ் நெறியாம். இதனை,

“மீனுண் கொக்கின் தூவி யன்ன வானரை கூந்தல் முதியோள் சிறுவன்"

என்பதனாலும்,

66

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே

என்பதனாலும் அறிக.

தன் குடிப்பெருமை பேணும் அவள், தன் நாட்டு நலம் பேணும் அவள், தன்னைப் பேணுதலைப் பொருட்டெனக் கொண்டிலள் ஆகலின் 'அலறுதலை' என்றார். அலறுதலை, பேணாமல், முடியாமல் காடெனக் கிடக்கும் தலை என்க முதியரும் பேணிக் கோடலால் அலறுதலை இல்லாமை பெறக் கூடும் ஆகலின். படர்ந்து தானே எழுந்து வீழும்தலை, அலறுதலை, காய்ந்த தலையையுடைய ஓமைமரத்தினை ‘அலறுதலை ஓமை' ய என்றார் ஐங்குறு நூற்றினும் (321). அத் தலைக்கு உவமை கூறுவாராய்ப் பயறு காவலர் பந்தரைக் கூறினார். மழைக்குத்