உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம்

12

தாங்கலாய் வேயும் கூரைபோலல்லாமல் வாய்த்த கொம்புகளை நட்டு இலை தழைகளைப் போட்டு, கைத்திறமோ, ஒழுங்கோ காட்டப்படாது வேயப்பெறும் பான்மையது பந்தர் ஆகலின் அதற்குத் தக்க உவமையாயிற்றாம். பயறு காய்த்துப் பறிக்கும் சில்கால எல்லைக்குரிமை யுடையதாகலின், கருதிக் கவினுறச் செய்யார் என்க.

வேந்தன் பகை நடுக்குறூஉம் பான்மையனே எனினும் பகைவர் பலராய் வலியராய் வந்தடர்த்த காலை ‘என் செய்வேம்' என்னும் சிறு துணுக்கம் உண்டாதலும் இயல்பாகலின், “என் செய்கு" என்னும் வேந்தன் என்றார். அவன் பறையறைந்து வருக என்றோ, ஆணையிட்டு அழைத்தோ முதியோள் ஈன்ற காளை வந்திலன் ஆகலின், ‘அஞ்சல்' என்பதோர் களிறு என்றார். வேந்தற்கு ‘அஞ்சல்' எனல் முறைமை அன்றாயினும், பொது நீக்கித் தனக்குச் செய்த சிறப்பும், தன்குடிச் சிறப்பும், தன்வீறும், சூழ்ந்த பகைவர் நிலையும் ஒருங்கு மூட்டிய கிளர்ச்சியான், தன்வீறும், சூழ்ந்த பகைவர் நிலையும் ஒருங்கு மூட்டிய கிளர்ச்சி யான் ‘அஞ்சல்' என்றான் என்க. தலைவன் தலைவிக்குத் தலை யளிசெய்தற் கண்ணும் வரும் 'அஞ்சல்' என்பதைக் களிறு கூறினான் ஆகலின் அமைதிகண்டு கொள்க.

இது முதியோள் சிறுவன் இயலும் சொல்லும் இனிதின் உணர்ந்த முதியோர் தம்முள் உரைத்த மொழியாம்.

15. தானை மறம் 6

நேரிசை ஆசிரியப்பா

33. வல்லோன் செய்த வகையமை வனப்பிற்

கொல்வினை முடியக் குருதிக் கூரிலை வெல்வேல் கைவலன் ஏந்திக் கொள்ளெனில் கொள்ளுங் காலும் மாவேண் டானே;

மேலோன், அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக்

கழற்கால் இளையோன் அழற்றிகழ் வெகுளி இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மன்னிர்!

தொல்லை ஞான்றைச் செருவினுள் இவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின்

அறுத்த கூந்தற் பிறக்கம் சகடம்

பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே;

(32)