உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும் அதனால், வல்லோர் பூழை நின்மின்; கல்லென

வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின்

அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோன் நிலையே!

149

புறத். 1375

(இ-ள்) வினைத் தேர்ச்சியாளன் செய்த பல்வேறு று வகைப்பட்ட வனப்பினதாய்க் கொல்லுத் தொழில் முற்றுப் பெற்ற குருதிபடிந்த கூரிய இலைவடிவிற்றாய வெற்றிதரும் வேலினைக் கையிற் செம்மாந்து ஏந்திக் 'கொள்க' என்று வழங்கியும் களங்கொள்ளும் அளவும் களிற்றைக் கொள்ளான் ம் மேம்பாட்டாளன்.புகழ்மீக் கூர்ந்த மன்னர்களே, அறிவொடும் அமைந்த போர்முறை தேர்ந்த புரவியை மேற்கொண்ட கழலணிந்த காலின் இவ்விளைய வீரனின் அழலென்ன வெதுப்பும் வெகுளியை எள்ளுதலை ஒழிமின்! மேலை நாட்போரில் இவன் வேலிடைப் பட்ட வீரர்தம் பெண்டிர் கைம்மை யுற்றமையால் அறுத்த கூந்தற் பாரத்தை வண்டிகள் பலவும் பொறுக்கலாற்றாமல் முரிந்தன; அதனால் வலிமை வாய்ந்தோர் முழுமுதல் அரணத்தின் நுழை வாயிற்கண் நின்று காமின்; கொடிய போர்க்களம் ‘கல்’ என ஒலிக்க அமைதலின் இவ் வீரமேம்பாடுடையான் ஆற்றல் அஞ்சத் தக்க தன்மை வ் யுடையதாம் என்றவாறு.

இ-து:- "மன்னிர், இளையோன் வெகுளி இகழ்தல் ஓம்புமின்; பூழை நின்மின்; அஞ்சுதகவுடைத்து ஆற்றலோன் நிலை” என்பது இது சொல்லியது.

(வி-ரை) “கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பும்' உண்டாகலின், வேலின் செயற்கை நலந்தோன்ற,

“வல்லோன் செய்த வகையமை வனப்பு”

என்றார். வல்லோன் - வினைத்தேர்ச்சியாளன். அவன் வினைத் தேர்ச்சியுடன் உடல்வலுவும் வாய்ந்தவனாதல் ‘வல்லோன்' என்பதனால் பெறுதும். கொல்லுத் தொழில் வல்லாரைக், ‘கருங்கைக் கொல்லர்' என்று கூறுதல் சான்றோர் வழக்காகலின்.

வேலுக்கு வனப்பாவது கூர்மையுடைமையும், வளைந்து கெடாமையும், பக்கம் சிதையாமையும், பிடிகேடில்லாச் சுரையமைதி யுடைமையுமாம். இதனால் அன்றே, “கண்திரள் நோன் காழ்” என்றும், “வைந் நுதிவேல்” என்றும் ஔவையார் குறித்தார் என்க.